கிளாம்பாக்கம் நடை மேம்பாலம்; `ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து' - உயர் நீதிமன்றம் அதிரடி

10 hours ago
ARTICLE AD BOX
சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை தமிழ்நாடு அரசு பிரமாண்டமாக கட்டியுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க அப்பகுதியில் ஒரு ஏக்கர் 45 சென்ட் நிலத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கையகப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்த நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

இந்த கால அவகாசம் முடிவதற்கு முன்பே, பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுவதாக கூறி கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் கலெக்டர் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனியார் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘‘நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடாமல், மாவட்ட அரசிதழில் கலெக்டர் வெளியிட்டுள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

பொதுமக்களின் கருத்தை கேட்கும் மாவட்ட கலெக்டரே, பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுகிறது என அறிவிக்க முடியாது. சட்ட விதிகளை முறையாக பின்பற்றாததால், நிலம் கையகப்படுத்த கலெக்டர் பிறப்பித்த இரு அறிவிப்புகளையும் ரத்து செய்கிறேன். சட்ட விதிகளை பின்பற்றி மீண்டும் நிலத்தை அரசு கையகப்படுத்தலாம்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
Read Entire Article