கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த ராபர்ட் டவுனி!

4 hours ago
ARTICLE AD BOX

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த ராபர்ட் டவுனி!

உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் இயக்குனர்களில் முக்கியமானவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய டார்க் நைட் ட்ரைலாஜி, இன்செப்ஷன், இண்டெஸ்டெல்லார் உள்ளிட்ட படங்களுக்கு தமிழகத்திலுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

வழக்கமாக அறிவியல் புனைவு –அதிலும் காலப்பயணம் சம்மந்தமான படங்களையே எடுத்து வந்த நோலன், தற்போது முதன்முறையாக வரலாற்று இதிகாச படத்தை இயக்குகிறார் நோலன். அவரின் அடுத்த படமாக கிரேக்க இதிகாச ஒடிசியை தழுவி திரைக்கதை அமைத்து இயக்குகிறார். இந்த படத்தில் மேட் டேமன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் போசிடான் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜூனியரை நடிக்கவைக்க நோலன் முயன்றுள்ளார். ஆனால் டவுனி தற்போது அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்து வருவதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம்.

ஹாலிவுட்டில் பெரும்பாலும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் நிலையில், நோலன் அதற்கு முற்றிலும் நேரெதிரானவர். அவருக்கு கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்துவது பிடிக்காது என்பதால் அவர் படங்களில் பல காட்சிகளை ஒரிஜினலாகவே படமாக்குவார். படத்துக்காக ஒரு நகரத்தையே அவர் உருவாக்கியுள்ளார். 
Read Entire Article