March 7th OTT Release: குடும்பஸ்தன் முதல் தண்டேல் வரை மார்ச் 7ல் ஓடிடிக்கு வரும் படங்களின் பட்டியல்!

3 hours ago
ARTICLE AD BOX

குடும்பஸ்தன் முதல் தண்டேல் வரையில் இந்த வாரம் மார்ச் 7 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
 

ஓடிடிக்கு வரும் படங்கள்

ஒவ்வொரு வாரமும் திரைக்கு வரும் படங்களின் எண்ணிக்கையை விட ஓடிடிக்கு வரும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் பிறகு வந்த பல படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதோடு நாளை பெரியளவில் எந்தப் படமும் வெளியாகவில்லை. என்பதால், இப்போது அனைவரது பார்வையும் ஓடிடி பக்கம் திரும்பியிருக்கிறது. அதன்படி, இந்த வாரம் ஓடிடிக்கு வரும் படங்களைப் பற்றி பார்க்கலாம்.
 

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் தண்டேல். மீனவர்களை மையப்படுத்திய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. நாக சைதன்யாவின் 2ஆவது திருமணத்திறகு பிறகு வெளியான இந்தப் படம், அவரது சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்தப் படம் நாளை மார்ச் 7ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் அவர்களது வாழ்க்கை முறை, இஎம்ஐ, கடன், வேலை ஆகியவற்றை காமெடியாக வெளிக்கொண்டு வந்த படம் தான் குடும்பஸ்தன். லவ்வன், ஜெய் பீம், குட் நைட் என்று வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து அதனை ஹிட் கொடுத்து வருகிறார் மணிகண்டன். அதுவும் குறைவான பட்ஜெட் படங்கள் தான். கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்து வெற்றிநடை போட்ட இந்தப் படம் ஜி5 ஓடிடியில் நாளை 7ஆம் தேதி வெளியாகிறது.

தம்பி ராமையா மற்றும் சமுத்திரக்கனி காம்போவில் வெளியான மற்றொரு படம் ராஜாகிளி. தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. வாழ்க்கையில் ஒன்றுக்கு அதிகமான திருமணங்கள் செய்வதால் உண்டாகும் பிரச்சனையால் ஒரு குடும்பம் எந்த நிலைக்கு செல்கிறது என்ற கதையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படம் நாளை மார்ச் 7ஆம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
 

ஷங்கர் தயாள் இயக்கத்தில் யோகி பாபு, செந்தில், சித்ரா லட்சுமணன் ஆகியோர் பலரது நடிப்பில் திரைக்கு வந்த இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அரசியல் கதையை காமெடியாக கொண்ட இந்தப் படம் நாளை மார்ச் 7ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் ரேகாசித்திரம். ஜோஃபின் டி ஜாகோ இயக்கத்தில் ஆசிஃப் அலி, அனஸ்வரன் ராஜன், மம்மூட்டி, மனோஜ், ஜெகதீஷ் ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் தான் ரேகாசித்திரம். ரூ.9 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.55 கோடி வரையில் வசூல் குவித்தது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையையும் ரேகாசித்திரம் படைத்தது. படம் வெளியாகி 2 மாதங்களுக்கு பிறகு இப்போது ஓடிடிக்கு வருகிறது. நாளை மார்ச் 7ஆம் தேதி சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையை கடந்த காலம், நிகழ்காலம் என்று தொடர்புபடுத்தி கண்டுபிடிக்கும் கதை தான் இந்தப் படம்.

இயக்குநர் ராம் நாராயண் இயக்கத்தில் விஸ்வக் சென் பெண் ரோலில் நடித்து வெளியான படம் தான் லைலா. பாக்ஸ் ஆபிஸில் தோல்வி கொடுத்த இந்தப் படம் நாளை மார்ச் 7ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
 

இப்ராஹிம் அலி கான் மற்றும் குஷி கபூர் ஆகியோரது நடிப்பில் உருவான நாடானியன் என்ற பாலிவுட் படம்  நாளை மார்ச் 7 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

Read Entire Article