ARTICLE AD BOX
கிரெடிட் கார்டு பில்லை EMI-யாக மாற்றுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? இதை நோட் பண்ணுங்க!
இப்போதெல்லாம் மக்கள் டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி அதிகம் என்பது தெரிந்தே சிலர் தங்களுடைய தேவைக்கு அதிகமாக ஷாப்பிங் செய்யவும், பில் செலுத்தவும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிக பில் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்படி இருக்கும் சிலருக்கு பில் செலுத்தும் போது தான் பிரச்சினை ஏற்படுகிறது.
எனவே அதிக பணம் செலுத்த சிரமப்படுபவர்களுக்காக பல கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பில்களை EMI-களாக மாற்றும் ஆப்ஷனை வழங்குகின்றன. இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் உடனடி நிவாரணம் பெற முடியும். ஆனால் பில் தொகையை EMI-களாக மாற்றும்போது அது நம் கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா? என்ற கேள்வி எழலாம்.

கிரெடிட் கார்டு பில்களில் ஈஎம்ஐ ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்தால் என்ன நடக்கும்?: பெரும்பாலும் அதிக பில் வரும்போது கிரெடிட் கார்டு பயனர்கள் முழு பில்லையும் ஒரே நேரத்தில் செலுத்துவதற்கு பதிலாக அதை மாதாந்திர தவணைகளாக செலுத்தலாம். ஆனால் நீங்கள் இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் அதற்க்கு செயலாக்க கட்டணங்கள், வட்டி கட்டணங்கள் போன்றவற்றை செலுத்த வேண்டி வரும்.
EMI ஆப்ஷனை பயன்படுத்துவது கிரெடிட் ஸ்கோரை குறைக்குமா?: ஒரு வேளை பில் செலுத்துவதற்கு பதிலாக EMI ஆப்ஷனை தேர்ந்தெடுப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை நேரடியாக பாதிக்காது. நீங்கள் எப்படி இஎம்ஐ தொகை செலுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் கிரெடிட் ஸ்கோர் அமையும். சரியான நேரத்தில் ஈஎம்ஐ செலுத்தினால் எந்தவித பிரச்சனையும் இல்லை. அதுவே ஈஎம்ஐ செலுத்த தாமதமானால் உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் குறையலாம்.
கிரெடிட் கார்டு பில்லை EMI ஆக மாற்றுவதன் நன்மைகள் மற்றும் தீமைகள்: கிரெடிட் கார்டு பில்லை EMI-ஆக மாற்றுவதால் பல நன்மைகளும் உள்ளன. அதே சமயம் தீமைகளும் உள்ளன. பில்லை சிறிய தொகைகளாக பிரிப்பதன் மூலம் உங்களுடைய பட்ஜெட்டில் எந்த வித தாக்கமும் ஏற்படாமல் கடனை அடைக்க முடியும். EMI-இன் வட்டி விகிதங்கள் நிலுவை தொகையின் வட்டியை விட குறைவாகத்தான் இருக்கும்.
தீமைகள்: பில்லை EMI-யாக மாற்றுவது கூடுதல் வட்டி செலவுகள் மற்றும் செயலாக்க கட்டணங்களுக்கு வழிவகுக்கலாம். எதிர்காலத்தில் நீங்கள் கடன் வாங்குவதில் பிரச்சனை ஏற்படும். எனவே சரியான நேரத்தில் இஎம்ஐ செலுத்த முடியும் என்று நம்பினால் மட்டுமே இஎம்ஐ விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.