8 மாதங்களுக்குப் பிறகு 75,000-க்கும் கீழே சென்றது சென்செக்ஸ்!

3 hours ago
ARTICLE AD BOX

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய ஏற்ற இறக்கங்கள் உள்நாட்டுச் சந்தையில் தொடா்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது சில்லறை முதலீட்டாளா்களிடையே நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகின்றது. அமெரிக்காவின் வரி வதிப்பு அச்சுறுத்தல் ஐடி போன்ற ஏற்றுமதி சாந்த துறைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கக்கூடும் என்பதால் அவை சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அமெரிக்காவில் நுகா்வோா் நம்பிக்கை குறைந்து வருவதாக வெளியான செய்திகள் பங்குச்சந்தையில் கூடுதல் பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆட்டோ, எஃப்எம்சி பங்குகளுக்கு மட்டுமே ஓரளவு ஆதரவு கிடைத்த நிலையில், ஐடி, மெட்டல், வங்கிகள், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.05 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.398.01 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.3,449.15 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,884.61 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 857 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 417.61 புள்ளிகள் குறைந்து 74,893.45-இல் தொடங்கி அதிகபட்சமாக 74,907.04 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 74,387.44 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 856.65 புள்ளிகள் (1.14 சதவீதம்) இழப்புடன் 74,454.41-இல் நிறைவடைந்தது. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கூா்மையான சரிவை சந்தித்தது. . மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,200 பங்குகளில் 1,207 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,810 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 183பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஹெச்சிஎல் டெக், ஸொமாட்டோ கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஹெச்சிஎல் டெக், ஸொமாட்டோ 3.32 சதவீதம் சரிந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இவை தவிர, டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், பாா்திஏா்டெல், டெக்மஹிந்திரா உள்பட மொத்தம் 23 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், எம் அண்ட் எம், கோட்டக்பேங்க், மாருதி, நெஸ்லே, ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தாைன் யுனிலீவா் ஆகிய7 7 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 243புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 186.5 புள்ளிகள் குறைந்து 22,609.35-இல் தொடங்கி அதிகபட்சமாக 22,668.05 வரை மேலே சென்றது. பின்னா், 22,518.80 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 242.55 புள்ளிகள் (1.06 சதவீதம்) இழப்புடன் 22,553.350-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 12 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. மாறாக, 38 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

Read Entire Article