ARTICLE AD BOX
லட்சக்கணக்கான பெற்றோருக்கு மன நிம்மதியை அளிக்கும் செயலியை உருவாக்கிய மாணவர்கள்..
டெல்லி: இந்தியாவில் நாள்தோறும் காலை வேளையில் லட்சக்கணக்கான பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பள்ளி பேருந்து, ஆட்டோ ரிக்ஷா என பல்வேறு வழிகளிலும் குழந்தைகளை படிப்பதற்காக அனுப்பி வைக்கிறார்கள்.
இவ்வாறு செல்லக்கூடிய குழந்தைகள் பாதுகாப்பாகத் தான் செல்கிறார்களா என்ற அச்ச உணர்வு ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் இருக்கும். இதனை தீர்க்கும் வகையிலான ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளனர் டெல்லியை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள். ராகுல் வர்மா, ஹரிஷ் சிங் மற்றும் பிரேம்குமார் ஆகிய மூன்று பேரும் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் வீட்டிலிருந்து பள்ளிக்கும் பள்ளியிலிருந்து வீட்டுக்கும் வாகனங்களில் பயணம் செய்வதை பெற்றோர் உறுதி செய்வதற்கான ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.

தன்னுடைய உறவினரின் குழந்தை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி செல்வதை ஒரு நாள் தான் கண்டபோது தான் இது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தானது ஆனால் பெரும்பாலான பெற்றோருக்கு இது தெரிவதில்லை இதனை சரிப்படுத்தும் வகையில் நாம் ஒரு தயாரிப்பைக் கொண்டு வர வேண்டும் என எண்ணம் தோன்றியதாக பிரேம்குமார் கூறுகிறார்.
தன்னுடைய நண்பர்களோடு இணைந்து லிட்டில் மூவ்(Little move) என்ற பெயரில் ஒரு மென்பொருளை இவர்கள் உருவாக்கினர். இந்த மென்பொருள் மூலம் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட பள்ளி வேன் அல்லது ஆட்டோ எங்கே செல்கிறது, எந்த இடத்தில் இருக்கிறது என்பன உன்கிட்ட அனைத்து நிகழ் நேர தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
பெற்றோர், பள்ளிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக இந்த லிட்டில் மூவ் செயலி செயல்படுகிறதாம். அதாவது பள்ளிகளுக்கு என ஒரு மென்பொருள் பெற்றோருக்கு என ஒரு மென்பொருள், வண்டி ஓட்டுநர்களுக்கு என ஒரு மென்பொருள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து இதை உருவாக்கியுள்ளனர். குழந்தை வேனில் அல்லது குறிப்பிட்ட வாகனத்தில் ஏறியதில் இருந்து பள்ளிக்கு சென்று சேர்வது, பள்ளியில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வருவது என அனைத்தையும் நாம் நிகழ நேர தகவலாக காண இயலும் .
ஓட்டுநர்கள் ஒரு கிளிக்கிலேயே தங்களுடைய வாகனம் புறப்பட்டதை இதில் அப்டேட் செய்துவிட்டால் அனைத்து பெற்றோர்களுக்கும் நோட்டிபிகேஷன் சென்று விடுமாம். பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அந்த வாகனம் எங்கெங்கு செல்கிறது என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நேரடியாகவே பார்த்துக் கொள்ள முடியும்.
கடந்த ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வந்த இந்த செயலி தற்போது டெல்லி மற்றும் நொய்டா பகுதிகளில் இருக்கும் குறிப்பிட்ட சில பள்ளிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதே தங்களின் எண்ணம் என கூறுகின்றனர் . இதற்காக ஒவ்வொரு மாணவர்களிடமும் ஒரு மாதத்திற்கு 50 ரூபாய் வசூல் செய்யப்படுவதாக இவர்கள் கூறுகின்றனர்.