ARTICLE AD BOX
PM கிசான் திட்டத்தின் 19-வது தவணை வரவில்லையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM கிசான்) திட்டத்தின் 19-வது தவணை நேற்றைய தினம் வழங்கப்பட்டது. பிப்ரவரி 24-ஆம் தேதியான நேற்று கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக ரூ.2,000 மாற்றப்பட்டது. இந்நிலையில் PM கிசான் திட்டத்தின் தவணைத் தொகை உங்கள் கணக்கிற்கு வந்து சேரவில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை. நேரடியாக உதவி எண்களுக்கு அழைப்பு விடுக்கலாம். இதன் மூலம் பிரச்சினை உடனடியாக தீர்த்து வைக்கப்படும்.
இதுவரையில் 18 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 19-வது தவணையை பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 22,000 கோடி இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னமும் சில விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் தவணை வழங்கப்படவில்லை. எனவே 19-வது தவணை பணம் யாருடைய கணக்கிற்கு வரவில்லையோ அவர்கள் உதவி எண்களுக்கு அழைத்தால், பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட்டு பணம் வரவு வைக்கப்படும்.
ஏதேனும் காரணத்திற்காக உங்களுக்கு PM கிசான் திட்டத்தின் 2000 ரூபாய் வரவில்லை என்றால் பிரச்சனை தீர்க்கப்பட்டவுடன் நிலுவையில் உள்ள தவணைகள் உங்களுக்கு வந்து சேரும். உங்கள் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தும் தவணைத் தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் நீங்கள் எளிதில் புகார் செய்யலாம். ஆனால் முதலில் பயனாளிகளின் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதை எப்படி தெரிந்துகொள்வது என்பதைப் பார்ப்போம்.
ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ PM கிசான் இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "Beneficiary list" என்ற பக்கத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 3: உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தின் விவரங்களை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க "Get Report" என்பதைக் கிளிக் செய்யவும். இது தவிர, உள்ளூர் ஊராட்சிகளிலும் பயனாளிகள் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஒருவேளை உங்களுடைய பெயர் லிஸ்டில் இருந்தும் பணம் வரவில்லை என்றால், கீழ்காணும் விஷயங்களைச் சரி பார்க்கலாம். உங்களுடைய வங்கி கணக்கு தகவல்கள் நீங்கள் விண்ணப்பிக்கும் போது சரியாக வழங்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை சரி பார்க்க வேண்டும். உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும். அதன் பிறகு ஈ-கேஒய்சி செயல்முறையை செய்துள்ளீர்களா?, உங்கள் நிலப்பதிவுகள் சரிபார்க்கப்பட்டதா? இவை அனைத்தும் சரியாக இருந்தால் தவணை பணம் உங்கள் கணக்கிற்கு வந்து சேரும்.
இவை அனைத்தையும் முடித்தும் பணம் வரவில்லை என்றால் நீங்கள் புகாரை பதிவு செய்யலாம். அதற்கு அதிகாரபூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதன் பிறகு கேப்ட்சா கோடை வழங்கி, கெட் ஓடிபி என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் 1800-11-5526 என்ற டோல் ஃப்ரீ நம்பர், 155261 என்ற ஹெல்ப்லைன் நம்பர், 011-23381092, 23382401 என்ற வாடிக்கையாளர் சேவை எண்களில் புகாரைப் பதிவு செய்யலாம்.