ARTICLE AD BOX
சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படம் உருவாகி வருகிறது. ‘கங்குவா’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் இப்படம் கைகொடுக்கும் என சூர்யா பெரிதும் நம்பியுள்ளார்.
இந்நிலையில், ‘சூர்யா 45’ படப்பிடிப்பு சென்னையை அடுத்த வெளிச்சி எனும் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. கிராமத்திற்கு செல்லும் முக்கிய சாலையை மறித்து ஷூட்டிங் நடத்தியுள்ளனர். இதனால், கிராம மக்கள் அளித்த புகாரை அடுத்து போலீசார் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். கிரேன் உள்ளிட்ட படப்பிடிப்பு கருவிகளை வைத்து இடையூறு ஏற்படும் வகையில் படப்பிடிப்பு நடத்தியுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அதிகாரிகள் உரிய அனுமதி இல்லாமல் படடப்பிப்பு நடத்தி வந்ததை அறிந்தனர். இதனால், படப்பிடிப்பு கருவிகள் அனைத்தும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. மேலும், உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தும்படி படக்குழுவினருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, யோகி பாபு, ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.