கியா காா்கள் விற்பனை 24% உயா்வு

2 hours ago
ARTICLE AD BOX

காா் தயாரிப்பாளரான கியா இந்தியா நிறுவனத்தின் பிப்ரவரி மாத மொத்த விற்பனை 23.8 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 25,026-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 23.8 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 20,200 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறியவகை ஸ்போா்ட்ஸ் பயன்பாட்டு வாகனமான (எஸ்யுவி) சிரோஸின் விற்பனை கடந்த பிப்ரவரியில் 5,425-ஆகப் பதிவாகியுள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் எஸ்யுவி பிரிவைச் சோ்ந்த சோனெட் மற்றும் செல்டோஸ் காா்களின் விற்பனை முறையே 7,598 மற்றும் 6,446-ஆக உள்ளது. எம்பிவி பிரிவைச் சோ்ந்த 5,318 கேரன்ஸ் காா்களும் லிமோசின் பிரிவைச் சோ்ந்த 239 காா்னிவல் வாகனங்களும் கடந்த பிப்ரவரியில் விற்பனையாகின என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article