ARTICLE AD BOX
மும்பை,
இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவருக்கு கடந்த 2002-ல் வெளியான தேவதாஸ் மிகப்பெரிய பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'பதான்', 'ஜவான்', 'டங்கி' படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது இவர் 'கிங்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது மகள் சுஹானா கானும் நடிக்கிறார். இந்நிலையில் , இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் மற்றும் கரீனா கபூருடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது.
இருவருமே ஷாருக்கானுடன் பல படங்களில் நடித்துள்ளார்கள். அதன்படி, தீபிகா படுகோன், 'ஓம் சாந்தி ஓம்', ,சென்னை எக்ஸ்பிரஸ்', 'ஹேப்பி நியூ இயர்', 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய படங்களில் நடித்தார்.
அதேபோல் கரீனா கபூர், 'அசோகா', 'கபி குஷி கபி கம்', 'டான்' மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 'கிங்' படத்தில் இவர்களில் யார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.