ARTICLE AD BOX
செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் கால்வாயில் ஒருவர் விழுந்து கிடப்பதாக அதனை கண்ட ஒரு நபர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கழிவுநீர் கால்வாயில் கிடந்தவரை சடலமாக மீட்டனர்.
மேலும், இந்த மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு அண்ணாநகர் 9வது குறுக்குத்தெருவில் வசித்து வரும் துரை (40) என தெரிய வந்தது. இவருடன் கருத்துவேறுபாடு ஏற்ப்பட்டதில் இவரது மனைவி தனது மகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
மேலும் பைக் மெக்கானிக் வேலை செய்து வரும் துரைக்கு மதுப்பழக்கம் இருப்பதாகவும் அடிக்கடி இவருக்கு வலிப்பு வருவதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறுகின்றனர். இவர் கால்வாயில எப்படிவிழுந்தார். மதுபோதையில தவறி விழுந்தாரா அல்லது மதுபோதையில் பிரச்சனை ஏற்பட்டு துரையை கால்வாயில் தள்ளிவிட்டு சென்றனரா என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கால்வாயில் ஆண்சடலம் மீட்பு appeared first on Dinakaran.