ARTICLE AD BOX
கான்கிரீட்டில் உணவுக் கழிவுகளைக் கலப்பதன் மூலம் கட்டுமானத்தின் வலிமையை அதிகரிக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கான்கிரீட் வலிமையை அதிகரிப்பது குறித்து ஐஐடி இந்தூர் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து வந்தது. இந்த நிலையில், கான்கிரீட்டில் நோய்க்கிருமி அல்லாத பாக்டீரியாவைக் கலப்பதன் மூலம் அதன் கட்டுமான வலிமை இரட்டிப்பாவது ஆய்வில் தெரிய வந்தது.
உணவுக் கழிவுகள் அழுகும்போது, அதிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு, கான்கிரீட்டில் உள்ள கால்சியம் அயனிகளுடன் வினைபுரிந்து கால்சியம் கார்பனேட் படிகங்களை உருவாக்குகிறது. இந்தப் படிகங்கள் கான்கிரீட்டில் உள்ள துளைகள் மற்றும் விரிசல்களை நிரப்புவதுடன், எடையில் குறிப்பிடத்தக்க விளைவையும் ஏற்படுத்தாமல் கான்கிரீட்டை திடமாக்குகின்றன.
இதையும் படிக்க: 2026 தேர்தலில் தவெக வரலாறு படைக்கும்! - விஜய்
அதுமட்டுமின்றி, துளைகள் மற்றும் விரிசல்கள் நிரப்பப்பட்டவுடன் பாக்டீரியா வளர்வதை நிறுத்திக் கொள்வதால், கட்டுமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது.
காலிஃபிளவர் தண்டு, உருளைக்கிழங்கு தோல், வெந்தயத்தின் தண்டு, ஆரஞ்சு பழத் தோல், அழுகிய பழக் கழிவுகள் முதலானவை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது.
இவையனைத்தும் ஈரப்பதமான நிலையில், தூளாக பதப்பட்டு, பின்னர் தண்ணீருடன் கலந்து ஒரு நிலையான திரவத்தை உருவாக்குகின்றன.