ARTICLE AD BOX
நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள சர்வதேச திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணியாக நடிகையாக இருப்பவர் ஷ்ருதி ஹாசன். இறுதியாக இவர் நடித்த சலார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.
தற்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கூலி, டிரைன், ஜன நாயகன், சலார் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தி ஹை (The Eye) என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை (பிப்.27) மும்பையில் வென்ச் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை டாப்னே ஷ்மோன் இயக்கியுள்ளார். திரையரங்குகளில் இந்தாண்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.