காதலியின் தம்பியை கொன்று தற்கொலை செய்த 23 வயது இளைஞன்; திருமணத்துக்கு மறுத்ததால் விபரீதம்.!

10 hours ago
ARTICLE AD BOX

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம், உளியகோவில் பகுதியில் வசித்து வருபவர் ஜார்ஜ் கோமஸ். இவருக்கு மகள், பேபின் ஜார்ஜ் என்ற 22 வயது மகன் இருக்கின்றனர். இவர் பிசிஏ இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இளைஞரின் அக்கா, கொல்லம் நீண்டகரையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ராஜு என்பவரின் மகன் தேஜஸ் ராஜை (வயது 23) காதலித்து வந்துள்ளார். 

காதலி தவிர்த்தார்

இந்த விஷயம் இருதரப்பு வீட்டுக்கும் தெரியவர, அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், அக்காவை தேஜஸுக்கு திருமணம் செய்ய பேபின் ஜார்ஜுக்கு விருப்பம் இல்லை. எதிர்ப்பும் தெரிவித்து இருக்கிறார். இதனிடையே, பெண்ணுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்த பின்னர், திடீரென காதலனையும் அவர் துண்டித்து இருக்கிறார். பலமுறை போனில் தொடர்புகொண்டும் பலனில்லை. 

கொலை & தற்கொலை

இதனால் தேஜஸ் ராஜ் காதலியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். மகளின் விருப்பம் இல்லை என்பதால், முடியாது என அவர்களும் கூறிவிட்டனர். இதனிடையே, ஆத்திரத்தில் இருந்த தேஜஸ் ராஜ், காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பேபின் ராஜை சரமாரியாக சரமாரியாக குத்திக்கொலை செய்தவர், காரில் தப்பிச் சென்று, கை நரம்பை அறுத்துக்கொண்டு, அவ்வழியே வந்த இரயில் முன் பாய்ந்த்து தற்கொலை செய்துகொண்டார். 

இதையும் படிங்க: ஒவ்வொரு நாளும் நரகம்.. கணவனின் கொடுமையால் குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. கண்ணீர் சோகம்.!

மருத்துவமனையில் இருந்த பேபின் ஜார்ஜ் மரணம் உறுதி செய்யப்பட, அவரின் தந்தை சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலியின் சகோதரன் காரணமாக திருமணம் நின்றிருக்கும் என கருதிய தேஜஸ் ராஜ் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: துணிதுவைக்கச் சென்ற பெண்களுக்கு ஏரியில் காத்திருந்த எமன்; இளம்பெண்கள் மூவர் நீரில் மூழ்கி பலி.!

Read Entire Article