ARTICLE AD BOX
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்தப்பூர் மாவட்டம், திலக் நகர் பகுதியில் வசித்து வருபவர் துபகுளா ராம் ஆஞ்சநேயலு. இவருக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். 3 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அவர்கள் தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
காதலுக்கு எதிர்ப்பு:
இதனிடையே, ஆஞ்சநேயலுவின் நான்காவது மகள் பாரதி (வயது 19), இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் ஆஞ்சநேயலுவுக்கு தெரியவரவே, அவர் காதலுக்கு எதிப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பிரசவம்; குழந்தை பிறந்து சிலமணிநேரத்தில் மரணம்..!
தந்தை கைது:
காதலில் உறுதியாக இருந்த பாரதி தந்தையிடம் விருப்பத்தை தெரிவிக்கவே, ஆத்திரமடைந்தவர் பாரதியை கொலை செய்து உடலை எரித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஆஞ்சநேயலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அத்தைகளிடம் அத்துமீற முயற்சி; மகனை துண்டுதுண்டாக்கி பலிபோட்ட தாய்.!