கள்ளக்காதல் கேவலம்.. கணவனின் தொண்டையை மனைவி பிடிக்க, ஆண் நண்பர் டிரம்மில்.. இவரும் ஒரு பெண்ணா?

4 hours ago
ARTICLE AD BOX

கள்ளக்காதல் கேவலம்.. கணவனின் தொண்டையை மனைவி பிடிக்க, ஆண் நண்பர் டிரம்மில்.. இவரும் ஒரு பெண்ணா?

India
oi-Hemavandhana
Subscribe to Oneindia Tamil

கான்பூர்: குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.. பெண்கள் மீதான பலாத்கார சம்பவங்கள் பெருகி வருகின்றன.. மற்றொரு புறம் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.. இதற்கு நடுவில், சில பெண்கள் செய்யும் கொடூரங்களும், பயங்கரங்களும் மக்களை நிலைகுலைய செய்துவிடுகின்றன.. அப்படியொரு சம்பவம்தான் நம் நாட்டில் நடந்துள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைதாகி உள்ளனர்.. அவர்களிடம் போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

மகளின் பிறந்த நாளுக்காக அமெரிக்காவில் இருந்து வந்த கணவனை, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அவரை 15 துண்டுகளாக மனைவி வெட்டி கொன்றார். பின்னர் உடல் பாகங்களை சிமெண்ட் கலவையுடன் டிரம்மில் அடைத்து வைத்த கொடூரம் மீரட்டில் நடந்துள்ளது.

uttar pradesh cement drum Boy friend

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் சவுரப் ராஜ்புத்.. இவருக்கு 29 வயதாகிறது.. அமெரிக்காவில் ஒரு கம்பெனியில் வணிக கடற்படையில் வேலை பார்த்து வந்தார்.

காணாமல் போன கணவர்

கடந்த பிப்ரவரி 24ம்தேதி இவரது 6 வயது மகளுக்கு பிறந்தநாள் ஆகும்.. எனவே மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக உத்தரபிரதேசத்திற்கு வந்திருக்கிறார்.. ஆனால், அடுத்த சில நாட்களில் ராஜ்புத் திடீரென காணாமல் போய்விட்டார்.. இதனால் குழம்பிப்போன உறவினர்கள், மீரட் நகர போலீசில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் அடிப்படையில், ராஜ்புத்தை தேடும் பணி ஆரம்பமானது. இறுதியில் ராஜ்புத் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து மீரட் நகர எஸ்பி சொல்லும்போது, "சவுரப் ராஜ்புத் மனைவி பெயர் முஸ்கான்.. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த 2016ல் திருமணம் நடந்துள்ளது.. முஸ்கான் மீதுள்ள காதலுக்காகவே, தன்னுடைய வெளிநாட்டு வேலையை ராஜ்புத் கைவிட்டாராம்.. கடந்த 2019ல், இந்த காதல் தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனாலும், முஸ்கானுக்கு, ராஜ்புத்தின் நண்பரான சாஹில் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

கண்டிப்பு - அட்வைஸ்

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம், ராஜ்புத்துக்கு தெரியவந்துள்ளது.. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்புத், மனைவியை கண்டித்திருக்கிறார்.. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.. கடைசியில் விவாகரத்து வரை சென்றுவிட்டது..

எனினும், தன்னுடைய பெண் குழந்தையின் எதிர்காலத்தை கருதி, ராஜ்புத் மறுபடியும் கடந்த 2023ல் அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்றார்.. 6 வயது மகளின் பிறந்தநாள் என்பதால், அதில் கலந்து கொள்வதற்காக கடந்த பிப்ரவரி 24ம் தேதி அமெரிக்காவில் இருந்து ராஜ்புத் வந்திருக்கிறார்..

கள்ளக்காதலர்கள் பதறினார்கள்

கணவர் வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டதால், முஸ்கானும், கள்ளக்காதலனும் பதறிப்போனார்கள்.. அதனால், ராஜ்புத்தை கொலை செய்ய முடிவு செய்தனர்.. இதற்காக ராஜ்புத்துக்கு, கடந்த மார்ச் 4ம் தேதி, சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து தந்திருக்கிறார் முஸ்கான்..

ராஜ்புத்தும் அதை சாப்பிட்டுவிட்டு அசதியில் தூங்கிவிட்டார்.. அப்போது, கள்ளக்காதலர்கள் இருவரும் கூர்மையான ஆயுதங்களால் ராஜ்புத்தை கொடூரமான முறையில் கொலை செய்தனர்.. பிறகு சடலத்தை மறைக்க அதை துண்டுகளாக வெட்ட முயன்றனர்.. தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் உடலை 15 துண்டுகளாக மனைவி வெட்டினார்.

சிமெண்ட் கலவை டிரம்

கள்ளக்காதலன் கத்தியால் ராஜ்புத்தின் இதயத்தை குத்தியதும், மனைவி அவரது தொண்டையை அறுத்துள்ளார்.. கைகளை தனியாக வெட்டியிருக்கிறார்கள். வெட்டப்பட்ட உடல் பாகங்களை வீட்டில் இருந்த டிரம்மில் போட்டுள்ளனர்.. பிறகு சிமெண்ட் கலவையை கொட்டி, உடல் பாகங்களை டிரம்மில் போட்டு மூடிவிட்டார்கள்.

ஆனால், வெளிநாட்டிலிருந்து வந்த ராஜ்புத்தை காணோமே? என்று அக்கம்பத்தினர் மனைவியிடம் விசாரித்துள்ளனர்.. அதற்கு முஸ்கான், இங்கே வெயில் அதிகம் என்பதால், மலை வாசஸ்தலத்திற்கு டூர் போயிருக்கிறார் என்று சொல்லி சமாளித்துள்ளார்..

கணவனை காணவில்லை

அடுத்த சில நாட்களில், ராஜ்புத் எங்கே என்று அக்கம்பக்கத்தினர் மீண்டும் விசாரிப்பார்களே என்று நினைத்த மனைவி, தன்னுடைய "கணவனை காணவில்லை, அவரை தேடி செல்கிறேன்" என்று சொல்லிவிட்டு, கள்ளக்காதலனுடன் இமாச்சல் பிரதேசத்துக்கு ஜாலியாக டூர் சென்றுவிட்டார். அப்படி போகும்போது, இறந்துபோன கணவனின் செல்போனையும் கையோடு கொண்டு சென்றுள்ளனர்..
இப்படிப்பட்ட சூழலில்தான், ராஜ்புத்தை காணவில்லை என்று உறவினர்கள் போலீசில் புகார் தந்தனர்.. எனவே, அதுகுறித்து விசாரிப்பதற்காக ராஜ்புத் வீட்டிற்கு வந்தோம்.. அங்கே கதவு பூட்டப்பட்டிருந்தது.. அதனால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது, முஸ்கான் ஏற்கனவே மழுப்பலான பதிலை சொன்னதை எங்களிடம் கூறினார்கள்.

ராஜ்புத்தின் உடல் பாகங்கள்

இதற்கு பிறகுதான், முஸ்கானையும், அவரது கள்ளக்காதலன் சாஹில் என்பவரையும் தேடி கண்டுபிடித்தோம்.. கள்ளக்காதல் ஜோடியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜ்புத்தை கொடூரமாக கொன்றதை வாக்குமூலமாக தந்தனர்.. இதற்கு பிறகு, சிமெண்ட் கலவையால் மூடப்பட்டிருந்த டிரம்மை திறக்க முயன்றோம். ஆனால், 2 மணி நேரம் முயற்சித்தும் அந்த டிரம்மை திறக்க முடியவில்லை..

இதற்காக வீட்டிலிருந்து டிரம்மை, ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு பிணவறைக்கு கொண்டு சென்றோம். அங்கு துளையிடும் இயந்திரத்தினை பயன்படுத்தி, டிரம்மை உடைத்து, ராஜ்புத்தின் சிதைந்த உடல் பாகங்களை வெளியே எடுத்தோம்.

இப்போது முஸ்கான், அவரது கள்ளக்காதலன் சாஹில் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருமே போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்கள்.. அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது" என்றனர்.

More From
Prev
Next
English summary
UP Wife go to Himachal pradesh with Boy friend for Jolly Tour and husband was in the cement filled drum
Read Entire Article