கல்கி படத்தில் வரும் சோழர் கால கோவில் மண்ணுக்குள் புதைந்தது எப்படி?

4 days ago
ARTICLE AD BOX

நடிகர்கள் பிரபாஸ், கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான `கல்கி கி.பி.2898’ திரைப்படத்தால் தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு கிராமம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த படத்தின் ஒரு காட்சியில் காட்டப்பட்ட பண்டைய கால கோவில் தான் இதற்கு காரணம். நெல்லூர் மாவட்டம் பெருமாள்ளபாடு என்ற இடத்தில் உள்ள அந்த கோவிலின் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்லூர் மாவட்டம் பெருமாள்ளபாடு என்ற இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. மணற்பாங்கான பகுதியின் நடுவில் ஒரு கோவிலின் உச்சி தெரியும். இது சிவன் கோவில் என்றும், அதனுள்ளே நாகலிங்கேஸ்வரர் இருப்பதாகவும் சோமசிலா மண்டல கோவில் அதிகாரி பென்சல வரபிரசாத் தெரிவித்தார். “அது நாகலிங்கேஸ்வர சுவாமி கோவில். ஆனால் கோவிலைக் கட்டியது யார்? எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை” என்றார்.

இக்கோவிலின் கட்டுமானம் மற்றும் அது கட்டப்பட்ட காலம் குறித்து தெளிவான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றாலும், கோவிலின் கட்டிடக்கலை பாணி சோழர் காலத்தைச் சேர்ந்தது என வரலாற்று ஆசிரியர் எதக்கோட்டா சுப்பாராவ் கூறினார். ”கோவிலைப் பார்க்கும்போது சோழர் காலத்தைச் சேர்ந்தது போல் தெரிகிறது. சோழர்கள் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டில் நெல்லூர் பகுதியை நோக்கி வந்தனர். கோவில் எப்படி பூமிக்குள் புதைந்தது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. நெல்லூர் பகுதியில் கடந்த காலங்களில் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், இந்தக் கோவிலும் அப்போது மூழ்கி இருக்கக்கூடும்” என தெரிவித்தார்.

​பெருமாள்ளபாடுவில் உள்ளவர்களில் சிலர் கோயிலின் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளனர். பெண்ணா ஆற்றின் வெள்ளத்தில் இவர்களது ஊர் மூழ்கியதால், இப்போது இருக்கும் இடத்தில் அதே பெயரில் ஒரு ஊர் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 70 வயதான ஜெயராம நாயுடு கூறுகையில், இந்த கோபுரம் 60 ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கு தெரியும் என்றும், குழந்தைகள் அங்கு விளையாடுவார்கள் என்றும் கூறினார். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, ​​நாங்கள் இங்கே துள்ளி குதித்து விளையாடுவோம். அப்போது எங்களுக்கு கோவிலின் மேல்புறம் உள்ள குவிமாடம் மட்டும் தெரிந்தது. சிறிது காலத்தில் கோவில் முற்றிலும் மணலில் மூழ்கியது” என்றார்.

Read more : இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எதிர்காலத்தில் பணக்காரர்களாக மாறுவார்களாம்..!! உங்க தேதி இருக்கா செக் பண்ணுங்க..

The post கல்கி படத்தில் வரும் சோழர் கால கோவில் மண்ணுக்குள் புதைந்தது எப்படி? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article