கலிபோர்னியா மாகாண கவர்னர் தேர்தல் | களமிறங்கும் கமலா ஹாரிஸ்!

3 days ago
ARTICLE AD BOX
Published on: 
21 Feb 2025, 2:15 am

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பிடம் தோல்வியடைந்த நிலையில், வாஷிங்டனில் இருந்து கலிபோர்னியா மாகாணத்திற்கு திரும்பியுள்ள கமலா ஹாரிஸ், களப்பணிகளை தொடர்ந்து வருகிறார். காட்டுத்தீக்கு எதிரான தீயணைப்புப் படையினரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார். தொடர்ந்து கலிபோர்னியாவில் செய்திகளாக வலம்வரும் கமலா ஹாரிஸ், கவர்னர் பதவிக்கான தேர்தலில் களமிறங்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் போட்டியிடும்பட்சத்தில், தேர்தலில் களமிறங்க விரும்பும் கட்சியின் இதர தலைவர்கள் அதிலிருந்து பின்வாங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

kamala harris running for california governor
கமலா ஹாரிஸ்pt web

இதுகுறித்து கமலா ஹாரிஸ், "நான் இங்கேதான் இருக்கிறேன், நான் எந்தப் பதவியை வகித்தாலும் இங்கேயே இருப்பேன். ஏனென்றால் அதுதான் சரியான செயல்” எனத் தெரிவித்துள்ளார்.

துணை அதிபராக நான்கு ஆண்டுகள் பணியாற்றி, அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருந்த ஒருவருக்கு ஆளுநர் பதவிக்கு போட்டியிடுவது என்பது தகுதி குறைவு என தவறாகக் கருதப்பட்டாலும், கமலா அவ்வாறு செய்வதன் மூலம், சக ஜனநாயகக் கட்சியினரின் உதவியுடன் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தை வழிநடத்த வலுவான வாய்ப்பைப் பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

அதிபர், துணை அதிபர், செனட்டர் மற்றும் அட்டர்னி ஜெனரல் என அனைத்துப் பதவிகளுக்காகவும் தேர்தல் வேட்பாளராக கலிபோர்னியாவில் நின்று ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

kamala harris running for california governor
“உங்கள் அதிகாரத்தை யாரும் பறிக்க முடியாது” - ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை உரையாற்றிய கமலா ஹாரிஸ்!
Read Entire Article