ARTICLE AD BOX
பெங்களூரு,
ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் சிறு தினங்களாக பறவை காய்ச்சல் அதிகரித்து வருகிறது, இந்த நோய் அடுத்தடுத்த மாநிலங்களிலும் பரவி வருகிறது. இதனால் தொடர்ந்து பரவாமல் தடுக்க கர்நாடக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து கோழிகள் மற்றும் முட்டைகளை வாங்க தடை விதித்துள்ளது. இதனால் பறவை காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மராட்டிய மாநிலத்தில் இந்த பறவை காய்ச்சலால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Related Tags :