கரும்புக்கு ரூ. 215 சிறப்பு ஊக்கத்தொகை.. வேளாண் பட்ஜெட்டில் வெளியான சிறப்பு அறிவிப்புகள்!

14 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

கரும்புக்கு ரூ. 215 சிறப்பு ஊக்கத்தொகை.. வேளாண் பட்ஜெட்டில் வெளியான சிறப்பு அறிவிப்புகள்!

News

தமிழக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 2025-26ம் நிதியாண்டுக்கான மாநில வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், முதலமைச்சரின் விவசாயிகள் சேவை மையங்கள் உள்பட பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியானது. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசுகையில் கூறியதாவது: விவசாயிகளுக்கு நிபுணர் வழிகாட்டுதல், தரமான விதைகள், உரங்கள்,பூச்சி மேலாண்மை தீர்வுகள் மற்றும் நவீன விவசாய தொழில்நுட்பங்களை அணுகுவதை நோக்கமாக கொண்ட 1,000 முதலமைச்சரின் விவசாயிகள் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

இந்த மையங்கள் ஆண்டுதோறும் தங்கள் படிப்புகளை முடிக்கும் 4,000 விவசாய பட்டதாரிகள் மற்றும் 600 டிப்ளமா பட்டதாரிகளின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தும். இந்த திட்டத்திற்காக மாநில பட்ஜெட்டில் ரூ.42 கோடி ஒதுக்கப்படும். இந்த மையங்கள் விவசாய ஆதரவிற்கான மையங்களாக செயல்படும்.

கரும்புக்கு ரூ. 215 சிறப்பு ஊக்கத்தொகை.. வேளாண் பட்ஜெட்டில் வெளியான சிறப்பு அறிவிப்புகள்!

விதைகள், உரங்கள் மற்றும் பிற விவசாய தேவைகள் போன்ற அத்தியாவசிய உள்ளீடுகளை வழங்கும். தமிழ்நாடு தினை உற்பத்தியை ஊக்குவிக்க தமிழ்நாடு தினை மிஷனுக்கு ரூ.55.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read
அடேங்கப்பா.. 62 கம்பெனி.. சிறிய அளவில் தொடங்கி உலகத்தை கலக்கும் இந்திய நிறுவனங்கள்..!
அடேங்கப்பா.. 62 கம்பெனி.. சிறிய அளவில் தொடங்கி உலகத்தை கலக்கும் இந்திய நிறுவனங்கள்..!

சமையல் எண்ணெய்க்கு இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க தமிழ்நாடு எண்ணெய் வித்து மிஷன் ரூ.108.06 கோடி செலவில் செயல்படுத்தப்படும். அரசாங்கம் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தாலும், கரும்பு மற்றும் நெல் சாகுபடிக்கு தொடர்ந்து அரசு மானியம் அளிக்கிறது. மத்திய அரசு நிர்ணயித்த நியாய விலைக்கு கூடுதலாக ஒரு டன் கரும்புக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இதன் மூலம் 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள், இதற்காக மொத்தம் ரூ.297 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இயந்திரமயமாக்கப்பட்ட நெல் சாகுபடிக்கு ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read
வாங்கினால் இந்த மாதிரி பங்குகளை வாங்கணும்.. ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட டாப் 10 பங்குகள்
வாங்கினால் இந்த மாதிரி பங்குகளை வாங்கணும்.. ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட டாப் 10 பங்குகள்

பண்ணை இயந்திரமயமாக்கலுக்கு ரூ.510 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 55,000 விவசாயிகள் பயனடைவார்கள். இது செயல்திறனை அதிகரிப்பது, தொழிலாளர் செலவுகளை குறைப்பது மற்றும விளைச்சலை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

விவசாயம் தொடர்பான தொழில்களை தொடங்க இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்க தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல், மண்ணுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் பசுந்தாள் உர சாகுபடியை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.142 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சமீபத்திய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும் அவற்றை தங்க வயல்களில் செயல்படுத்தவும் உதவும் வகையில், சீனா, ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு 100 முற்போக்கான விவசாயிகளுக்கு சர்வதேச ஆய்வு பயணத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Written by: Subramanian

Read Entire Article