கன்னியாகுமரியில் 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை

3 days ago
ARTICLE AD BOX

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் பிப்ரவரி 26ம் தேதி (புதன்கிழமை) மகா சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறையும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பத்தாவது நாள் திருவிழாவையொட்டி வரும் மார்ச் 11ம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளை, அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Read Entire Article