ARTICLE AD BOX
சிறிதளவு தனியா, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், வெந்தயம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, பொடியாக்க வேண்டும். நல்லெண்ணெயில் சிறிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, நான்கு துண்டாக நறுக்கிய பிஞ்சு கத்திரிக்காயையும் சேர்த்து, வதக்க வேண்டும்.
–
அதில், இடித்து வைத்த பொடி, புளி கரைத்த நீர், மிளகாய் பொடி, சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து, வேக விட வேண்டும். நன்கு வெந்து, கத்தரிக்காய் மசிந்து, மசாலாவோடு, சேர்த்து தொக்கு போல இருக்கும். அப்பதத்தில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கினால், மணமணக்கும் கொத்சு தயார்!.
–
தினமும் சட்னி, சாம்பார் செய்ய அலுத்துக் கொள்பவர்கள், கொத்சு செய்து வைத்துக் கொண்டால், ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். புளி சேர்ப்பதால் சீக்கிரம் கெட்டுப் போகாது.