கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்... அப்படீன்னா?

11 hours ago
ARTICLE AD BOX

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செயவதால் என்ன லாபம்???

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்ய முடியுமா??

இந்த வசனத்திற்கு இரண்டு விதமான விளக்கங்களைக் கொடுக்கலாம்.

முதலாவது விளக்கம்:

எதையுமே நாம் செய்ய வேண்டிய நேரத்தில் செய்து முடித்து விட வேண்டும். பிறகு செய்யலாம் என்று தள்ளிப் போடக் கூடாது. கண்கள் கெட்டுப் போன பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியுமா? முடியாதே? அதைப் போலத் தான் நாம் தள்ளிப் போட்ட செயல்களால் ஏற்படும் பாதிப்பை நம்மால் தவிரக்க முடியாது.

உதராணங்கள்:

மாணவர்கள் பரீட்சை வருவதற்கு முன்னால் சரியாக படிக்காமல் அப்புறம் படித்து கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்து விட்டு பரீட்சைக்கு முன்தினம் முட்டி முட்டி படித்து விட்டு பாதி புரிந்தும் பாதி புரியாமலும் பரீட்சை எழுதி Fail ஆன பிறகு முதலிலேயே படித்திருந்தால் நன்றாக இருக்குமோ என்று யோசித்து என்ன லாபம்? Fail ஆனது Fail தானே.

அதைப் போல ஒரு பொருள் சிறிது Repair ஆக இருக்கும் போதே அதை கவனித்து சரி செய்தால் குறைந்த செலவிலேயே சரியாகிவிடும். அப்படி செய்யாமல் முழுவதும் Repair ஆகி இனி ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலைமைக்கு வந்தால் புதியதை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது தான் நம்மிடம் பணமும் இருக்காது. முதலிலேயே சரி செய்திருந்தால் ஏன் இந்த பிரச்சினை?

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஆரம்பத்திலியே மருத்துவரை அணுக வேண்டும். பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டு கொண்டே போனால் நஷ்டம் நமக்குத் தான். முற்றிப் போன பிறகு காண்பித்தால் ஒருவேளை உயிரை பாதிக்கும் வியாதியாக இருந்து இனிமேல் காப்பாற்ற முடியாது, காலம் கடந்து விட்டது என்று கூறி விட்டால் என்ன செய்வது? உயிர் போனால் திரும்பி வருமா??? யோசித்து என்ன லாபம்?

ஆகவே எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வதுதான் உத்தமம்.

இரண்டாவது விளக்கம்:

நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கங்களை ஆரம்பத்திலேயே விடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். சில பேர் கல்லூரி காலத்திலோ அல்லது ஆபீஸ் செல்லத் துவங்கும் போதோ சிகரெட் பிடித்தல், மது அருந்துதல், புகையிலை போடுதல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். அவர்கள் யாராவது எடுத்து சொல்லியும் அல்லது தனக்கே நல்லது இல்லை என்று தெரிந்தும் அலட்சியத்தோடு யார் பேச்சையும் கேட்காமல் மேலும் மேலும் அதையே செய்யத் தொடங்குகிறார்கள்.

அதன் விளைவு, அவர்களின் உயிருக்குத் தான் ஆபத்து. மேலும் மேலும் மதுவை அருந்தி சிகரெட்டை பிடிப்பதால் நுரையீரல் கல்லீரல் எல்லாம் பாதிக்கப்படும். காலம் கடந்த பிறகு அந்த பழக்கத்தை விடுவதால் ஒரு லாபமுமில்லை. பாதிக்கப்பட்டது பாதிக்கப்பட்டது தான்.

அதைப் போல நம்மிடமிருக்கும் கெட்ட பழக்கம் அதாவது ஏமாற்றுதல், பொய் கூறுதல் போன்ற குணங்களையும், நமக்கு ஒருவர் அதனால் வரும் பின் விளைவுகளை பற்றி கூறி எடுத்துரைக்கும் போது நாம் அப்போதே திருத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும். அந்த சமயம் வருத்தப்பட்டு ஒரு பிரயோசனமும் இல்லை.

இந்த இரண்டு விளக்கங்களை மனதில் வைத்து கொண்டு நடந்து கொண்டால் நமக்கு எல்லா விதத்திலும் நன்மையே உண்டாகும்!!!

இதையும் படியுங்கள்:
மல்லாரி இசை எப்போது இசைக்கப்படும்?
Surya namaskar
Read Entire Article