ARTICLE AD BOX
கடந்த 2024ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கெர்பீல்ட் சோபர்ஸ் விருதை பெற்றிருக்கிறார் ஒரு இந்திய வீரர்.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் எந்த வீரர் சிறப்பாக செயல்பட்டாரோ அவரே சிறந்த வீரர் என்ற பட்டத்தைப் பெற்று விருதை வெல்வார். அந்தவகையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சென்ற ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.
இந்த விருதுக்கு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் போட்டி போட்ட நிலையில் இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி பும்ரா இந்த விருதை தட்டிச் சென்றிருக்கிறார். இதன் மூலம் இந்த மிகப்பெரிய கௌரவத்தை பெற்ற ஐந்தாவது வீரர் என்ற சாதனையை பும்ரா பெற்றிருக்கிறார்.
இதற்கு முன்னர் 2004ம் ஆண்டு ராகுல் ட்ராவிடும், 2010ம் ஆண்டு சச்சினும், 2016ம் ஆண்டு அஸ்வினும், 2017 மற்றும் 2018ம் ஆண்டு விராட் கோலியும் இந்த விருதை பெற்றுள்ளனர். இந்த லிஸ்ட்டில் பும்ராவும் இணைந்துள்ளார்.
ஆனால், இந்திய வரலாற்றிலேயே ஒரு வேகப்பந்துவீச்சாளர் முதல்முறை இந்த விருதை வாங்கியுள்ளார். பும்ரா 2024 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 13 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
பும்ரா 2024 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட் வீரர் விருது மற்றும் 2024 ஆம் ஆண்டு சிறந்த டி20 அணியிலும் சிறந்த டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை பும்ராவுக்கே சேரும். டெஸ்ட் தரவரிசையின் உலகளவில் நம்பர் 1 வீரர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பவுலிங் ஆவரேஜ் உடன் 200 விக்கெட்டை எடுத்த வீரர் என்ற பெருமையை பும்ரா படைத்திருந்தார்.
கபில்தேவுக்கு பின்னர் ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நபர் பும்ரா. ஆகமொத்தம் சென்ற ஆண்டு மட்டும் பல சாதனைகளைப் படைத்த பும்ராதான் சென்ற ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார்.