ARTICLE AD BOX
கஞ்சி காய்ச்சாமல், மாவு அரைக்காமல் ஈஸியான முறையில் மொறு மொறு வத்தல் செய்வது எப்படி என்று பார்ப்போம். இந்த முறையில் வத்தல் செய்தால் ஒரு வருசம் ஆனாலும் கெடாது.
ரொம்ப ஈஸியாக வத்தல் செய்வது எப்படி என்று Indian Recipes Tamil யூடியூப் சேனலில் அபி செய்து காட்டியுள்ளார். இப்போது வத்தல் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
ஸ்டவ்வை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாய்யை வையுங்கள். அதில் 2 கப் தண்ணீர் ஊற்றுங்கள். 1 டீஸ்பூன் கல் உப்பு சேருங்கள். நன்றாகக் கொதிக்கத் தொடங்கியதும் 1 கப் அளவு பச்சரிசி மாவு சேர்த்துக்கொள்ளூங்கள். ஸ்டவ்வில் தீயை மிதமாக வைத்துவிட்டு நன்றாக கலந்துவிடுங்கள். மாவு நன்றாக வெந்து வர வரைக்கும் கிளறிவிடுங்கள். சாதம் போல பக்குவத்துக்கு வரும் வரை கிளறிவிடுங்கள்.
இப்போது ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு, அரை மணி நேர்த்துக்கு மூடி போட்டு மூடி விடுங்கள். அரை மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால், மாவு நன்றாக வெதுவெதுப்பாக இருக்கும். இதை சப்பாத்தி மாவு பக்குவத்துக்கு பிசைய வேண்டும். இப்படி பிசையும் போது, மாவு சாஃப்ட்டாக இருக்கும். மாவு எந்த அளவுக்கு சாஃப்ட்டாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வத்தல் கிரிஸ்பியாக இருக்கும்.
மீண்டும் ஒரு 5 நிமிடம் கைகளால் மாவை பிசையுங்கள். மாவு நன்றாக சாஃப்ட்டாக மாறி இருக்கும். இப்போது, மாவைத் திரட்டி, ஒரு பகுதியை சிலிண்டர் வடிவில் உருட்டி எடுத்து இடியாப்பம் பிழியும் குழலில் போட்டு, ஒரு சீட்டில் தின் லேயராக வத்தல் பிழியுங்கள். பின்னர், அவற்றை வெயிலில் காய வையுங்கள். 2-3 நாள் வெயிலில் நன்றாகக் காய வேண்டும். அப்போதுதான் கெட்டுப்போகாமல் இருக்கும். இவற்றை, நீங்கள் வழக்கம் போல, எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான, மொறு மொறு வத்தல் தயார். இதை மகாராஷ்டிராவில் குருதா என்று கூறுகிறார்கள். வெயில் காலத்தில் செய்து ஸ்ட்ரோ செய்து வைத்துக்கொள்கிறார்கள். உங்கள் வீட்டில் நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.