ஓகே சொல்லிவிட்டு எஸ்கேப் ஆன ரஜினி!.. இப்ப வரைக்கும் படாதபாடு படும் இயக்குனர்!...

3 hours ago
ARTICLE AD BOX

Rajinikanth: ஒரு இயக்குனர் ஒரு கதையை எழுதும்போது ஒரு நடிகரை மனதில் நினைத்து எழுதுவார். அந்த நடிகரிடம் கதையும் சொல்வார். ஆனால், அந்த நடிகர்தான் அந்த கதையில் நடிப்பார் என சொல்ல முடியாது. அந்த கதை வேறு ஒரு நடிகருக்கும் போதும். எந்த நடிகர் நடிக்கிறாரோ அவருக்கு ஏற்றார் போல கதையில் மாற்றம் செய்வார் இயக்குனர்.

சில சமயம் ஒரு கதை அந்த நடிகருக்கு பிடித்திருந்தாலும் வேறு படங்களில் நடிக்க ஒப்புகொண்டிருப்பதால் அந்த இயக்குனரை சில மாதங்கள் காத்திருக்க சொல்வார். ஆனால், எல்லா இயக்குனர்களும் அப்படி காத்திருக்க மாட்டார்கள். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேனன்.


காக்க காக்க: முதல் படமே வெற்றி என்பதால் இரண்டாவதாக சூர்யாவை வைத்து காக்க காக்க படத்தை இயக்கினார். முதல் படத்தை தயாரிப்பாளருக்காக எடுத்ததால் காக்க காக்க படத்தை முழுக்க முழுக்க தனது ஸ்டைலில் எடுத்தார். இந்த படம்தான் சூர்யாவை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. அதோடு, கவுதம் மேனன் ஒரு ஸ்டைலீசான இயக்குனர் என்றும் காட்டியது.

துருவ நட்சத்திரம்: அதன்பின் சூர்யாவை வைத்து வாரணம் ஆயிரம் படத்தையும் எடுத்தார் கவுதம் மேனன். சூர்யாவுக்கே மிகவும் பிடித்த படம் அது. அதன்பின் துருவ நட்சத்திரம் என்கிற தலைப்பில் ஒரு கதையை எழுதி சூர்யாவிடம் சொன்னார் கவுதம் மேனன். ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை.


சியான் விக்ரம்: அதன்பின் விக்ரமிடம் சொல்லி அந்த கதையை எடுத்தார் கவுதம் மேனன். இந்த படம் உருவாகி 4 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை படம் வெளியாகவில்லை. கவுதம் மேனன் வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் இந்த படம் வெளியாகவில்லை. இப்போது மதகஜராஜா ஹிட் அடித்திருக்கும் நிலையில் துருவ நட்சத்திரத்தையும் படத்தையும் ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது.

விக்ரமுக்கு முன்பு இந்த கதையை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். அவரின் வயதுக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்களை செய்தே சொல்லியிருக்கிறார். கவுதம் மேனன் சொன்னது ஒரு ஸ்பை திரில்லர் கதை என்பதால் தமிழுக்கு இது செட் ஆகுமா என்கிற தயக்கம் ரஜினிக்கு இருந்திருக்கிறது. ஆனாலும் கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்துள்ளார். காலையில் நடிக்கிறேன் என சொன்னவர் மாலையே கவுதம் மேனனை தொடர்பு கொண்டு இந்த கதையில் நான் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். அப்போது பா.ரஞ்சித் சொன்ன கபாலி கதையை ஓகே செய்து அதில் நடித்தார் ரஜினி.

அதன்பின் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை எடுத்து முடித்து இப்போது வரை ரிலீஸ் செய்யமுடியாமல் தவித்து வருகிறார் கவுதம் மேனன். விரைவில் இப்படம் வெளியாகும் என்றே நம்பலாம்.

Read Entire Article