ARTICLE AD BOX
சென்னை: சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைந்து பணியாற்றி வரும் படத்திற்கு கலைஞர் – சிவாஜி கணேசனின் சூப்பர் ஹிட் படமான ‘பராசக்தி’ என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் திரையுலக வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த ‘பராசக்தி’ திரைப்படம் 1952ம் ஆண்டு கிருஷ்ணா பஞ்சு இயக்கத்தில் வெளியானது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் இந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இருந்தார்.
அதே போல் இந்த படத்தின் மூலம் தான் சிவாஜி கணேசன் ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ந்த படத்தில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்தில் சூர்யா நடிக்க இருந்தார். அப்போது படத்துக்கு ‘புறநானூறு’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்போது தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. இது 1960களில் நடந்த இந்தி திணிப்பு போராட்டம் தொடர்பான கதையாகும்.