ARTICLE AD BOX
சென்னை,
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 'லக்கி பாஸ்கர்' படம் வெளியானது. வெங்கி அட்லுரி இயக்கிய இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.
சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் ரூ.120 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் நவ-28ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியான இப்படம் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது ஓ.டி.டி.யில் வெளியாகி 13 வாரங்கள் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது லக்கி பாஸ்கர் படம்.