ARTICLE AD BOX

Tamannah: வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த பல நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். ரசிகர்களால் மில்க் பியூட்டி என அழைக்கப்பட்டவர். கல்லூரி என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இளம் நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார்.

இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வளர்ந்த நடிகை இவர். விஜய்க்கு ஜோடியாக சுறா படத்திலும், அஜித்துக்கு ஜோடியாக வீரம் படத்திலும் நடித்திருக்கிறார். இது போக தமிழின் முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்துள்ள நடிகை இவர். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானார்.

அதைப்பயன்படுத்தி பாலிவுட்டிலும் நுழைந்தார். ஆனால், இவருக்கு கிடைத்தது என்னவோ படுக்கையறை காட்சிகளை கொண்ட வெப்சீரியஸ்தான். அந்த காட்சிகளில் அவருடன் நடித்த விஜய் வர்மாவுக்கும் இவருக்கும் இடையே காதல் உருவானதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், தமன்னா அதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஜெயிலர் 2 படத்தில் தமன்னா ஆடிய காவால பாடல் செமயாக ரீச் ஆனது. அந்த பாடலுக்கு தமன்னா போட்ட ஆட்டம் அந்த படத்தின் வெற்றிக்கே ஒரு காரணமாக அமைந்தது. அதன்பின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாட ஒரு கோடி வரை வாங்கினார் தமன்னா.

ஒருபக்கம், கொளுக் மொழுக் பால்மேனியை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தமன்னா பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் காஜி ஃபேன்ஸ்க்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்திருக்கிறது.
