ARTICLE AD BOX

அந்தக் காலத்தில் என்எஸ்கே பாடலில் நகைச்சுவை அதிகம் இருக்கும். அப்புறம் கண்ணதாசன் ஒருசில பாடல்கள் எழுதினார். அதன்பிறகு வாலியும் எழுதி இருக்கிறார். வைரமுத்து அப்படி எழுதிய ஒரு பாடல்தான் இது. அதைப் பற்றிப் பார்க்கலாமா..!
2 கஞ்சன்: ஒரு கஞ்சன் இருக்கான். எப்படிப்பட்டவன்னா நாய்த்தோல்ல வடிகட்டுன கஞ்சன். அவனோட கஞ்சத்தனத்துக்கு 2 எடுத்துக்காட்டு சொல்லலாம். அவன் சோத்துல உப்பு போட மாட்டான். அப்படின்னா எப்படி சாப்பிடுறதுன்னு கேட்கலாம். சோத்தைக் கொண்டு முன்னாடி வச்சிட்டு அழுதா அந்தக்கண்ணீர் சிந்தி அதுல உள்ள உப்பை வச்சி பிசைஞ்சி சாப்பிடுவானாம்.
ஒருத்தன் கல்யாணம் முடிஞ்சதும் தேனிலவுக்கு போகணும்னு நினைச்சானாம். ஆனா பஸ்ஸ்டாண்டுல தனியா நின்னுருக்கான். அங்க ஒருத்தன் எங்கடா போறன்னு கேட்க தேனிலவுன்னு சொல்லிருக்கான். பொண்டாட்டிய எங்கடான்னு கேட்க, ரெண்டு பேரு போனா செலவு ரொம்ப வரும்.
பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி: அதான் தனியா போறேன்னு சொன்னானாம். அதுக்கு ஏன்டா ஹனிமூன் போகணும். ரெண்டு பேரு போறதுதான் ஹனிமூன். நீ போறது தனிமூன்னு சொல்ல, ஆமா இல்ல. அப்படின்னா செலவு மிச்சம்னு திரும்பவும் வீட்டுக்கே போயிட்டானாம்.
பௌர்ணமி நேரம் பாவை ஒருத்திஅப்படிப்பட்ட ஒரு நகைச்சுவை பாட்டுதான் இது. 1981ல் வந்த பாலைவனச்சோலை படத்துல வருது. இதுல வரும் 'பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி' பாடலில் காமெடிக்குப் பஞ்சமில்லை. இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தவர் சங்கர் கணேஷ். பாடியவர் எஸ்பிபி. முதல்ல பல்லவிலேயே காமெடியாகச் சொல்லி இருப்பார் கவிப்பேரரசர்.
காமெடி பாடல்: 'பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போலே முன்னால் போனாள்... பின்னல் கண்டு பின்னால் போனேன்... பொண்ணு ஊருக்குப் புதுசா என்றேன்... காலில் உள்ளது புதுசு என்றாள். ஓ மேலே கேட்காதே'ன்னு அழகான வரிகளைப் போட்டு இருப்பார். இதை ஒரு தடவை படித்தாலே அர்த்தம் புரிந்து விடும்.

அடுத்த சரணத்தில் 'தேனிலவும் போகணும்னா தனியா தான் போவானே... உப்பு வாங்க வேணும்னா கண்ணீர் விட்டுக்கொள்வானே..'ன்னு மேலே சொன்ன கஞ்சனின் காமெடியைப் போட்டு இருப்பார். அடுத்த சரணத்தில் நடிகன் எப்படி இருப்பான்னு காமெடியா சொல்லி இருப்பார்.
பாடல் முழுவதும் காமெடி: 'வானொலியில் நாடகத்தில் ஊமை வேஷம் போட்டானே... இதெப்படி இருக்கு? அந்த வேஷம் போட்டவன் ஆமை வேகம் கொண்டவன். அவன்தான் எங்கள் வீரன்'னு சொல்லி இருப்பார் கவிப்பேரரசர். இப்படிப் பாடல் முழுவதும் காமெடி. இளைஞர் பட்டாளத்துடன் நண்பியாக வரும் சுஹாசினி விழுந்து விழுந்து சிரிக்கிறார். பாடலை படத்தில் சந்திரசேகர் பாடுகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு ஆண்கள், பெண்களை நடத்துற விதமே ரொம்ப அழகா இருந்துச்சுன்னு சொல்வாங்களாம். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.