ARTICLE AD BOX
CCL 2025: கர்நாடகா புல்டோசர்ஸ் vs சென்னை ரைனோஸ்.. விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சென்னை ரைனோஸ்!
மைசூர்: திரையுலக நட்சத்திரங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த 2011ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பிப்ரவரி 7ந் தேதி தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் இன்று நடைபெறும் அரையிறுதிக்கான பேட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் vs சென்னை ரைனோஸ் இடையே கடுமையான போட்டி நடந்து வருகிறது.
இதுவரை நடைபெற்ற போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடிய நிலையில், 3 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே போல சென்னை ரைனோஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணியின் கேப்டனான ஆர்யா இருக்க, கீ பிளேயர்களாக விஷ்ணு விஷால், ஜீவா, விக்ராந்த், சாந்தனு ஆகியோர் உள்ளனர்.

இன்று நடைபெற்று வரும் அரையிறுதிக்கான போட்டியில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை எடுத்திருந்தது. அதே போல சென்னை ரைனோஸ் அணி முதல் இன்னிங்கில், பத்து ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்திருந்தது. மேலும் பிரித்வி மற்றும் விக்ராந்த் இருவரும் சிறப்பாக விளையாடினர், இதில், விக்ராந்த், 22 பந்துகளில் 50 ரன்களை குவித்தார்..
விறுவிறுப்பான ஆட்டம்: இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா புல்டோசர்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக பச்சான் மற்றும் கார்த்திக் களமிறங்கிய நிலையில் முதல் ஓவரில் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து, சுதீப் மற்றும் பரத் ஆடிய நிலையில், கார்த்திக் 14 ரன்களில் 22 ரன்களை எடுத்து சிறப்பாக ஸ்கோர் செய்கிறார். புல்டோசர்ஸ் மற்றொரு 5 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்த,83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்கை சென்னை ரைனோஸ் அணி ஆடத் தொடங்கியது. இதில் சரன் மற்றும் சாந்தனு இருவரும் ராஜீவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து பிரித்வி மற்றும் அஜய் இருவரும் ஆடிவந்த நிலையில் பிரித்வி 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தற்போது சென்னை ரைனோஸ் அணி மூன்று ஓவரில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
மோதப்போவது யார்: காலையில் நடைபெற்ற செமி பைனலுக்கான போட்டியில் பெங்கால் டைகர்ஸ் vs பஞ்சாப் டி ஷெர் மோதின இதில்,பஞ்சாப் டி ஷெர், நடப்பு சாம்பியனான பெங்கால் டைகர்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று CCL 2025 இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள நிலையில், இறுதிப்பேட்டியில் பஞ்சாப் டி ஷெர் அணியுடன் கர்நாடகா புல்டோசர்ஸ் அணி மோத உள்ளதா, சென்னை ரைனோஸ் அணி மோத உள்ளதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.