ARTICLE AD BOX
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் வெவ்வேறு அமைப்பைச் சேர்ந்த 3 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்னௌபால் மாவட்டத்தில் காங்லெய் யாவோல் கன்னா லுப் எனும் அமைப்பைச் சேர்ந்த லைஷ்ராம் தோம்பா சிங் (வயது 27) மற்றும் யும்னாம் ரோஷன் மெதெய் (33) ஆகிய இருவரை நேற்று (மார்ச் 19) பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் அதன் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதையும் படிக்க: தில்லி: அக்பர் சாலை பெயர்ப் பலகையில் கருப்பு மை பூசிய ஹிந்து அமைப்பினர்!
இதேபோல், பிஷ்னுப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அரசு ஊழியர்களை மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்த தடை செய்யப்பட்ட சோசியலிஸ்ட் ரெவாலியூஷனரி பார்ட்டியை (எஸ்.ஒ.ஆர்.இ.பி.ஏ.) எனும் அமைப்பை சேர்ந்த சலாம் ப்ரோஜன் சிங் (47) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, எஸ்.ஒ.ஆர்.இ.பி.ஏ. அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்ட 8 மிரட்டல் கடிதங்களையும், சலாமிடம் இருந்து பிஷ்னுப்பூர் மாவட்டத்திலுள்ள 38 பள்ளிக்கூடங்களின் பட்டியலையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.