சர்ச்சையை கிளப்பிய ஆடியோ.. ’பெரியார் விருது’ கோபி நயினார் முடிவுக்கு என்ன காரணம்? பின்னணி

13 hours ago
ARTICLE AD BOX

சர்ச்சையை கிளப்பிய ஆடியோ.. ’பெரியார் விருது’ கோபி நயினார் முடிவுக்கு என்ன காரணம்? பின்னணி

Chennai
oi-Mani Singh S
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் திரைப்படத்தின் இயக்குநரான கோபி நயினார், திராவிடர் கழகம் தனக்கு அளித்த தந்தை பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளார். கோபி நயினாரின் இந்த முடிவுக்கு பின்னால் உள்ள காரணம் மற்றும் அவர் மீது எழுந்த விமர்சனங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

திருவள்ளூர் மவட்டம் காட்டூர் பகுதியில் வசித்து வருபவர் கோபி நயினார். அறம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான இவர், தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் ரிலீஸ்க்கு தயராக உள்ளது. சமூக விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வந்த கோபி நயினார் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். சுற்றுச்சூழல் போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்.

Gopi Nainar Periyar award Dravidar Kazhagam

திமுக மீது விமர்சனம்

காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் கூட பழவேற்காடு பகுதியில் குவாரிக்காக நிலத்தை தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரமாக போராடினார். இதற்கிடையே தான் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "திமுக அரசு மீதும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார். மக்களுக்காக போராடும் செயற்பாட்டாளர்கள் மீது திமுக அரசு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் விமர்சித்து இருந்தார்.

சமூக வலைத்தளத்தில் பரவிய ஆடியோ

அதேபோல திகவை சேர்ந்த மதிவதணி மீதும் விமர்சனம் முன்வைத்து இருந்தார். இதையடுத்து, கோபி நயினார் மீது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை ஒரு தரப்பினர் முன்வைத்தனர். மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தனர். இதற்கிடையே, கோபி நயினார் பேசியதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதாவது குறிப்பிட்ட ஒரு கட்சியை பற்றி கோபி நயினார் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறி ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆளும் அரசுக்கு எதிராக பேசியதாலாயே கோபி நயினார் குறிவைக்கப்படுவதாக அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வந்தனர். இத்தகைய சூழலுக்கு இடையேதான் கோபி நயினார் தந்தை பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் நீண்டதொரு பதிவையும் வெளியிட்டு இருக்கிறார் கோபி நயினார்.

அரசியல் கேள்வி எழுப்பினால் சிலருக்கு கோபம் வருது! பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்.. கோபி நயினார்
அரசியல் கேள்வி எழுப்பினால் சிலருக்கு கோபம் வருது! பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்.. கோபி நயினார்

தலித் மக்கள் குடிமனை கேட்டதற்கு

அறம் என்ற திரைப்படத்தின் கதைக்காக எனக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம், நிஜ வாழ்வில் அதனை நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது.

தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன் என்றும், தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது எனவும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு, திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை. இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
English summary
Gopi Nayinar, the director of the film Aram starring actress Nayanthara, has said that he will return the Dravidar Kazhagam's Thaatthaya Periyar Award. Here is a look at the reason behind Gopi Nayinar's decision and the criticism leveled against him.
Read Entire Article