ARTICLE AD BOX
Published : 20 Mar 2025 07:11 PM
Last Updated : 20 Mar 2025 07:11 PM
தணிக்கை, ஐ.டி சட்டங்களை மீறுவதாக மத்திய அரசு மீது எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் வழக்கு

பெங்களூரு: சமூக ஊடகங்களின் உள்ளடக்கம் (content) தொடர்பாகவும், தண்ணிச்சையான தணிக்கையை (arbitrary censorship) எதிர்த்தும் அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க்குக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான 'எக்ஸ்', மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தொடர்ந்துள்ள வழக்கில், "தேசிய பாதுகாப்பு, இறையாண்மை அல்லது பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை பொதுமக்கள் அணுகுவதை அரசு தடுக்க தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A வழி வகுக்கிறது. இருப்பினும், இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன் உரிய மறு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என சட்டம் கோருகிறது. இந்த மறு ஆய்வுக்கான விதிகளை 2009 தகவல் தொழில்நுட்ப விதிகள் வரையறுத்துள்ளது.
எனவே, டிஜிட்டல் உள்ளடக்கம் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A-வை பின்பற்ற வேண்டும். இந்த சட்டப்பிரிவின்படியே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், உள்ளடக்கம் தொடர்பாக அரசு தன்னிச்சையாக அறிவிப்புகளை வெளியிட, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (I&B) சட்டப் பிரிவு 79(3)(b) பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டப் பிரிவு, நீதிமன்ற உத்தரவு அல்லது அரசு அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆன்லைன் தளங்கள் சட்டவிரோத உள்ளடக்கத்தை அகற்ற வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
சட்டப் பிரிவு 79(3)(b), சட்டப் பிரிவு 69A-க்கு முரணாக உள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறுவதாகவும், ஆன்லைனில் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்தை மட்டுப்படுத்துவதாகவும் உள்ளது. பிரிவு 69A-வில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட சட்ட செயல்முறையைத் தவிர்த்து, அரசு 79(3)(b) சட்டப் பிரிவைப் பயன்படுத்துகிறது.
சட்டப் பிரிவு 79(3)(b)-ன்படி, ஒரு தளம் 36 மணி நேரத்துக்குள் அரசின் அறிவிப்புக்கு இணங்கத் தவறினால், பிரிவு 79(1) இன் கீழ் அது தனக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பை இழக்க நேரிடும். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) உட்பட பல்வேறு சட்டங்களின் கீழ் பொறுப்பேற்க நேரிடும். இந்த அச்சுறுத்தல்கள், பிரிவு 69A-க்கு எதிரானவை.
உள்ளடக்கத்தைத் தடுக்க அரசுக்கு தன்னிச்சையான அதிகாரத்தை பிரிவு 69A வழங்கவில்லை. உரிய நடைமுறைகளைப் பின்பற்றப்பட வேண்டியதை அது கட்டாயப்படுத்துகிறது. ஆனால், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையான தணிக்கையை விதிக்க அதிகாரிகள் 79(3)(b) பிரிவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
பிரிவு 79(3)(b) ஐ அரசு ஒரு குறுக்கு வழியாகப் பயன்படுத்துகிறது. இதனால் உரிய ஆய்வு இல்லாமல் உள்ளடக்கத்தை அகற்ற அனுமதிக்கப்படுகிறது. தன்னிச்சையான தணிக்கையைத் தடுக்கும் சட்டப் பாதுகாப்புகளை பிரிவு 79(3)(b) நேரடியாக மீறுகிறது" என தெரிவித்துள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட நக்ஸலைட்டுகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு
- “பாஜகவும், ஆம் ஆத்மியும் விவசாயிகள் விரோதக் கட்சிகள்” - காங்கிரஸ் தலைவர் கார்கே சாடல்
- தொகுதி மறுவரையறைக்கு எதிரான ‘டி-ஷர்ட்’ சலசலப்பு முதல் டி.ஆர்.பாலு ஆவேசம் வரை: நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
- சத்தீஸ்கரில் 22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு