ஒரே கதை… இரண்டு படங்கள்… அடப்பாவிங்களா இந்த படம் இதோட காப்பி தானா? இது தெரியாம போச்சே!

4 days ago
ARTICLE AD BOX

Kollywood: தமிழ் சினிமாவில் எல்லா திரைப்படங்களுமே புதுசா எடுப்பதாக நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. ஒரே கதையை ஆட்டைய போட்டு கொஞ்சம் திரித்து இன்னொரு படத்தினை ரிலீஸ் செய்து அதையும் ஹிட் அடித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அட நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லலை. ஆனா இப்ப வரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த சில படங்களே இன்னொரு படத்தின் அப்பட்டமான காப்பியாக இருப்பதை நம்ம முடிகிறதா? அதற்கான டாப் 5 லிஸ்ட் தான் இங்கு தொகுப்பாகி இருக்கிறது.

ஹீரோவும் ஹீரோயினும் காதலிக்கின்றனர். வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு வர அவர்களை சம்மதிக்க வைக்க இருவரும் ஒருவர் வீட்டுக்கு இன்னொருவர் மாறி போய் காதலில் ஜெயித்தார்களா என்பதுதான் கதை. ஆமாங்க சிம்ரன் - பிரசாத் நடிப்பில் வெளியான ஜோடி கதைதான்.

ஆனால் இதே போன்ற கதை தான் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார். இரண்டுமே 1999ம் ஆண்டு ஒரு மாத இடைவெளியில் வெளியான படங்கள். இப்ப ரிலீஸ் ஆகிருந்தா நல்லா சிக்கி இருப்பாங்க.

வேறு ஊருக்கு திருமணம் ஆகி செல்லும் ஹீரோவோட தங்கை. அவருக்கு அங்கு ரவுடிகளால் எக்கசக்க பிரச்னை. அதை அண்ணனாக ஹீரோ கேட்பார். கூடவே ஒரு ஹீரோயின் வேறு. தெரிஞ்சிடுச்சா? விஜய் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான திருப்பாச்சி. படும் சூப்பர்ஹிட். இதே கதையில் 2021ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்தே படுதோல்வி.

ஹீரோவின் தங்கையும், தங்கை கணவரும் திருமணமாகி ஒரு பெரிய அரண்மனையில் குடியேற அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் ஆயிரம் ஜென்மங்கள். இதே போன்ற கதையை தான் சுந்தர்.சி தன்னுடைய அரண்மனை சீரிஸில் பயன்படுத்தி இருந்தார்.

ஹீரோ மற்றும் ஹீரோயின். இதில் ஒருவருக்கு குறட்டை பிரச்னை இருக்க இன்னொருவர் அதில் படும் அவஸ்தை. இதை மையமாக வைத்து மணிகண்டன் நடிப்பில் குட் நைட் படம் உருவாகி ஹிட் அடித்தது. தொடர்ந்து ஜிவி நடிப்பில் டியர் படம் வெளியாகி பெரிய அளவில் பேசப்படவில்லை.

ஹீரோ தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் ஜாலியாக வாழ்கிறார். அப்போது பழைய காதலி வருகை எப்படி பிரச்னையாக அமைகிறது என்பது கதை. இதே கதையில் 2006ல் சில்லுனு ஒரு காதல் ரிலீஸாகி சூப்பர்ஹிட் அடிக்க, ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தீராக் காதல் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Read Entire Article