ARTICLE AD BOX
ஷிகர் தவான்
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் 2024 வரை 17 வருடங்கள் ஐபிஎல்லில் விளையாடியிருக்கும் ஷிகர் தவான், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் என 5 ஐபிஎல் பிரான்சைஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
221 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் தவான், 51 அரைசதங்கள் மற்றும் 1 சதம் உட்பட 6769 ரன்களை குவித்துள்ளார்.
தோல்வி: ஒரு வீரராக 108 ஐபிஎல் போட்டிகளில் தோற்றிருக்கும் ஷிகர் தவான் இந்தப்பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறார்.
வெற்றி: 110 ஐபிஎல் வெற்றிகளில் பங்கேற்றுள்ள இவர் பட்டியலில் 7வது வீரராக நீடிக்கிறார்.
மகேந்திர சிங் தோனி
அறிமுக சீசனான 2008 ஐபிஎல் முதல் 2025* ஐபிஎல் வரை விளையாடிவரும் மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
அதிக 5 ஐபிஎல் கோப்பைகள் வென்ற வீரராக கீரன் பொல்லார்டு மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளார்.
229 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் தோனி 24 அரைசதங்களுடன் 5243 ரன்கள் அடித்துள்ளார்.
வெற்றி: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு வீரராக விளையாடியிருக்கும் தோனி, 150 போட்டிகளில் வெற்றிபெற்று பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
தோல்வி: ஆனால் அதேநேரத்தில் 110 போட்டிகளில் தோல்வியை கண்டு தோல்வி பெற்றவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறார்.
ரோகித் சர்மா
அதிக ஐபிஎல் கோப்பைகள் வென்ற வீரர்கள் பட்டியலில் அம்பத்தி ராயுடுவுடன் முதலிடத்தை பகிர்ந்திருக்கும் ரோகித் சர்மா, 6 முறை கோப்பைகள் வெல்லும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
2008 முதல் 2025* வரை ஐபிஎல் தொடர்களில் விளையாடிவரும் ரோகித், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
252 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் அவர், 43 அரைசதங்கள் மற்றும் 2 சதத்துடன் 6628 ரன்கள் அடித்துள்ளார்.
வெற்றி: மும்பை, டெக்கான் இரண்டு அணிகளுக்கும் விளையாடியுள்ள ரோகித் சர்மா 133 வெற்றிகளை பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். ரோகித் உடன் ஜடேஜாவும் பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.
தோல்வி: ஆனால் தோல்விகள் பெற்ற வீரர்கள் பட்டியலில் 119 தோல்விகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.
2. தினேஷ் கார்த்திக்
2008 ஐபிஎல் முதல் 2024 ஐபிஎல் வரை விளையாடியிருக்கும் தினேஷ் கார்த்திக், தன்னுடைய ஐபிஎல் வாழ்க்கையில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் லயன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
234 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் அவர், 22 அரைசதங்களுடன் 4842 ரன்கள் அடித்துள்ளார்.
வெற்றி: 6 அணிகளுக்காக விளையாடியிருக்கும் தினேஷ் கார்த்திக் 125 வெற்றிகளுடன் 3வது வீரராக பட்டியலில் நீடிக்கிறார்.
தோல்வி: ஆனால் 123 போட்டிகளில் தோற்று தோல்விகண்டவர்களின் பட்டியலில் 2 இடத்தை பிடித்துள்ளார்.
1. விராட் கோலி
2008 முதல் தற்போது வரை ஐபிஎல் கிரிக்கெட் விளையாடிவரும் விராட் கோலி 17 சீசன்களிலும் ஒரே அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்காக 244 இன்னிங்ஸ்களில் விளையாடி 8004* ரன்களை குவித்துள்ளார்.
244 இன்னிங்ஸ்களில் விளையாடி 55 அரைசதங்கள், 8 சதங்களுடன் 8004* ரன்களை குவித்துள்ளார் விராட் கோலி.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (8004 ரன்கள்), அதிக சதங்கள் (8), அதிக கேட்ச்கள் (110) பிடித்த வீரராக முதலிடத்தில் நீடிக்கும் விராட் கோலி, ஒரு வீரராக அதிக வெற்றிகள் கண்ட வீரர்கள் பட்டியலில் 116 வெற்றிகளுடன் 6வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆனால் தோல்விகள் கண்ட வீரர்கள் பட்டியலில் 125 தோல்விகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார் விராட் கோலி. ஐபிஎல்லில் கோப்பை வெல்லாமல் இருந்துவரும் விராட் கோலியின் பயணம் 2025 ஐபிஎல்லில் நிறைவேற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ஆர்சிபி ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.