ஒரு நாளுக்கு வெறும் 4 ரூபாய்.. தினமும் 1 ஜிபி டேட்டா இலவசம்.. அசரடிக்கும் BSNL ரீசார்ஜ் பிளான்!

1 day ago
ARTICLE AD BOX

ஒரு நாளுக்கு வெறும் 4 ரூபாய்.. தினமும் 1 ஜிபி டேட்டா இலவசம்.. அசரடிக்கும் BSNL ரீசார்ஜ் பிளான்!

Technology
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை: விலை அதிகமான ரீசார்ஜ் திட்டங்களால் கடுப்பாகி, குறைந்த விலையில் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட பிளான்களை தேடுகிறீர்களா? உங்களுக்கான சிறந்த ஆப்ஷனை வழங்குகிறது பி.எஸ்.என்.எல். 6 மாத கால வேலிடிட்டியுடன் தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கும் பிளான் வெறும் ரூபாய் 750க்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு செலவு வெறும் 4 ரூபாய் தான்.

இந்திய அரசின் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு கலக்கலான நீண்ட வேலிடிட்டி கொண்ட பிளான்களை வழங்கி வருகிறது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்து வரும் நிலையில், BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது.

BSNL recharge mobile

கடந்த சில மாதங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கஸ்டமர் ரேஞ்ச் வேகமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஏராளமான டவர்களையும் அமைத்து வருகிறது பி.எஸ்.என்.எல். நாடு முழுவதும் விரைவில் 4ஜி டேட்டாவை கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது. சிறந்த நெட்வொர்க் சேவையை வழங்குவதன் மூலம், மீண்டும் அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என நம்புகிறது பி.எஸ்.என்.எல்.

ரொம்ப நாள் வேலிடிட்டி வேணுமா? ஏர்டெல் வழங்கும் சூப்பரான பிளான்ஸ் இதோ! ஒரு நாளுக்கு வெறும் 6 ரூபாய்!
ரொம்ப நாள் வேலிடிட்டி வேணுமா? ஏர்டெல் வழங்கும் சூப்பரான பிளான்ஸ் இதோ! ஒரு நாளுக்கு வெறும் 6 ரூபாய்!

பிஎஸ்என்எல் ரூ.750 பிளான்

BSNL வழங்கும் ரூபாய் 750 திட்டத்தில், உங்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் 6 மாதங்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா என மொத்தம் 180 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இன்டர்நெட் டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 40 Kbps ஆக குறையும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS இலவசமாக வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் தவிர, வேறு எந்த தனியார் டெலிகாம் நிறுவனமும் இதுபோன்ற பிளானை கொண்டிருக்கவில்லை. இந்த பிளானில் சராசரியாக ஒரு நாளுக்கு வெறும் 4 ரூபாய் தான் செலவாகும். வெறும் 4 ரூபாய் செலவில் 1 ஜிபி டேட்டாவை வழங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்தப் பிளான் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

More From
Prev
Next
English summary
BSNL's Rs 750 prepaid plan comes with 1GB of daily data. This plan offers unlimited voice calling and 100 SMS/day. This plan comes with a service validity of 180 days.
Read Entire Article