ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பதவி நீட்டிப்பு

4 days ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் கடந்த 2022 ஜனவரியில் தலைமை பொருளாதார ஆலோசகராக வி.அனந்த நாகேஸ்வரன் பொறுப்பேற்றார். ஒன்றிய அரசில் சேருவதற்கு முன்பு, அவர் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல வணிக கல்லூரிகள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.

கடந்த 2019 முதல் 2021 வரை, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதிநேர உறுப்பினராக பணியாற்றினார். இந்த நிலையில்,பிரதமர் மோடி தலைமையில் நடந்த நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அனந்த நாகேஸ்வரனின் பதவி காலத்தை வரும் மார்ச் 2027 வரை அதாவது 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன.

The post ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பதவி நீட்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article