ஒடிசா: பள்ளிகளைக் காவிமயமாக்கும் பாஜக அரசு!

3 hours ago
ARTICLE AD BOX

ஒடிசாவில் அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் காவிநிற வர்ணம் பூச பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் காவி நிறம் பூசுவது தொடர்பாக, அதற்கான மாதிரிப் படத்துடன் ஒடிசா மாநில மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கையை பாஜக அரசு அனுப்பியுள்ளது. பாஜக அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிஜு ஜனதா தளத்தின் மூத்தத் தலைவர் பிரசன்னா ஆச்சார்யா கூறியதாவது, பள்ளிகளுக்கு காவி நிறம் பூசுவதன் நோக்கம் என்ன? கட்டடங்களின் நிறங்களை மாற்றுவதன் மூலம் கல்வி முறையை மாற்ற முடியுமா அல்லது மாணவர்களிடையே அதிக ஆற்றலைக் கொண்டுவர முடியுமா? மாணவர்களின் மனதில் அரசியலைப் புகுத்தும் முயற்சியில்தான் பாஜக ஈடுபடுகிறது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்

இதனிடையே, பள்ளிகளின் மீதான நிறமாற்றம் குறித்து ஒடிசா பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியதாவது, ``அரசின் இந்த முடிவு, ஒரு நல்ல சூழலை உருவாக்கும். பள்ளிகளின் நிறமாற்றத்தால், பள்ளிகள் மேலும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்" என்று பதிலளித்தார்.

கடந்தாண்டு, ஒடிசாவில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னர்வரையில், பிஜு ஜனதா தளக் கட்சிக் கொடியில் இருக்கும் பச்சை நிறத்தில்தான் பள்ளிகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article