ARTICLE AD BOX
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று சுமார் 6 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 43 வயதாகும் தோனி கடந்த ஐபிஎல் தொடர் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி வீரராக மட்டும் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடர் தொடங்கும் போதெல்லாம் தோனியின் ஓய்வு பற்றி பேச்சு வரும். அதேபோல், தற்போதும் தோனி ஓய்வு குறித்து பேச்சு பரவலாக வருகிறது.
இதுகுறித்து தோனியே மனம் திறந்து பேசி உள்ளார். ஒரு தனியார் நிகழ்ச்சியில் தோனி பேசுகையில், ‘நான் 2019ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். ஐபிஎல்லில் சிறிது நேரம் ஆகலாம். எதுவாக இருந்தாலும் சில ஆண்டுகள்தான். கடந்த சில ஆண்டுகளாக நான் கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன். உங்களுக்குத் தெரியும், என்னால் விளையாட முடியும். நான் பள்ளியில் படிக்கும் போது சிறுவயதில் எப்படி இருந்தேனோ, நான் அதை அனுபவிக்க விரும்புகிறேன்’ என்றார்.
The post ஐபிஎல்லில் ஓய்வு எப்போது? மனம் திறந்த தோனி appeared first on Dinakaran.