ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேகேஆர் - ஆர்சிபி மோதல்!

6 hours ago
ARTICLE AD BOX

Published : 22 Mar 2025 08:45 AM
Last Updated : 22 Mar 2025 08:45 AM

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேகேஆர் - ஆர்சிபி மோதல்!

<?php // } ?>

கொல்​கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் திரு​விழா​வின் 18-வது சீசன் போட்​டிகள் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் கண்​கவர் கலை நிகழ்ச்​சிகளு​டன் இன்று தொடங்​கு​கிறது.

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் திரு​விழா​வின் 18-வது சீசன் போட்​டிகள் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் கண்​கவர் கலை நிகழ்ச்​சிகளு​டன் இன்று தொடங்​கு​கிறது. மே 25-ம் தேதி வரை நடை​பெறும் இந்த கிரிக்​கெட் திரு​விழா​வில் தலா 5 முறை சாம்​பியன்​களான சென்னை சூப்​பர் கிங்​ஸ், மும்பை இந்​தி​யன்​ஸ், 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், 2008-ல் பட்​டம் வென்ற ராஜஸ்​தான் ராயல்​ஸ், 2016-ல் வாகை சூடிய சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத், 2022-ல் கோப்பையை வென்ற குஜ​ராத் டைட்​டன்ஸ் ஆகிய அணி​களு​டன் 17 சீசன்​களாக பட்​டம் வெல்ல முடி​யாமல் போராடும் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு, பஞ்​சாப் கிங்ஸ் அணி​களும் மற்​றும் 3 ஆண்​டு​களுக்கு முன்​னர் அறி​முக​மாகி 2 முறை பிளே ஆஃப் சுற்​றில் கால்​ப​தித்த லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யும் பட்​டம் வெல்​வதற்​காக மல்​லுக்​கட்ட உள்​ளன.

தொடக்க ஆட்​டத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​யுடன் மோதுகிறது. இரு அணி​களுமே புதிய கேப்​டனின் தலை​மை​யில் களமிறங்​கு​கின்​றன. கடந்த சீசனில் கொல்​கத்தா அணி​யின் கேப்​ட​னாக இருந்த ஸ்ரேயஸ் ஐயர் இம்​முறை பஞ்​சாப் அணிக்கு சென்​றுள்​ளார். இதனால் கொல்​கத்தா அணி அஜிங்க்ய ரஹானே தலை​மை​யில் விளை​யாட உள்​ளது. அதேவேளை​யில் பெங்​களூரு அணி இது​வரை சர்​வ​தேச டி20 கிரிக்​கெட்​டில் அறி​முக​மா​காத ரஜத் பட்​டி​தார் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது.

கொல்​கத்தா அணி​யின் பேட்​டிங்​கில் டாப் ஆர்​டரில் சுனில் நரேன், குயிண்டன் டி காக், அஜிங்க்ய ரஹானே, வெங்​கடேஷ் ஐயர், ரஹ் மனுல்லா குர்​பாஸ் பலம் சேர்க்​கக்​கூடும். நடு​வரிசை​யில் மணீஷ் பாண்​டே, ரோவ்​மன் பாவெல், அங்க்​கிரிஷ் ரகு​வன்ஷி நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​கள் பின்​வரிசை​யில் ஆந்த்ரே ரஸ்​ஸல், ரிங்கு சிங் ஆகியோரின் தாக்​குதல் ஆட்​டம் பலம் சேர்க்​கக்​கூடும்.

பந்​து​வீச்​சில் புதிர் சுழற்​பந்து வீச்​சாளர்​ளான வருண் சக்​ர​வர்த்​தி, சுனில் நரேன் எதிரணி​யின் பேட்​ஸ்​மேன்​களுக்கு சவால்​தரக்​கூடும். இவர்​களு​டன் மொயின் அலி​யும் பலம் சேர்க்​கக்​கூடும். வேகப்​பந்​து​வீச்​சில் அன்​ரிச் நோர்க்​கி​யா, ஹர்​ஷித் ராணா, ஸ்பென்​சர் ஜான்சன், உம்​ரான் மாலிக் நம்​பிக்கை அளிக்​கக்​கூடும்.

பெங்​களூரு அணி​யில் டாப் ஆர்​டரில் பில் சால்ட், விராட் கோலி ஜோடி பவர்​பிளே​வில் முக்​கிய பங்​கு​வகிக்​கக்​கூடும். டிம் டேவிட், தேவ்​தத் படிக்​கல், ஜிதேஷ் ஷர்​மா, லியாம் லிவிங்​ஸ்​டன் ஆகியோ​ரும் உறு​துணை​யாக செயல்​படக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் ஜோஷ் ஹேசில்​வுட், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ரொமாரியோ ஷெப்​பர்ட், லுங்கி நிகிடி ஆகியோர் சவால்​தரக்​கூடும். சுழலில் ஜேக்​கப் பெத்​தேல், கிருணல் பாண்​டி​யா, சுயாஷ் சர்மா பலம் சேர்க்​கக்​கூடும்.

போட்டி தொடங்​கு​வதற்கு முன்​ன​தாக 6 மணி அளவில் கண்​கவர் தொடக்க விழா நடை​பெறுகிறது. இதில் பாலிவுட் நடிகை திஷா பட்​டானி​யின் நடனம் இடம் பெறுகிறது. ஸ்ரேயா கோஷல், கரன் அஜூலா ஆகியோர் பல்​வேறு பாடல்​களை பாடி ரசிகர்​களை மகிழ்விக்க உள்​ளனர்.

இதற்கிடையே போட்​டியின்​ போது ​ மழை குறுக்​கீடு இருக்​கக்​கூடும்​ என வானிலை மையம்​ தெரிவித்​துள்​ளது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article