ஐபிஎல் 2025: தோனி எந்த இடத்தில் களமிறங்குகிறார்? சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!

19 hours ago
ARTICLE AD BOX

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தோனி எந்த இடத்தில் களமிறங்குவார்? என்பது குறித்தும், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் கணிப்பையும் அம்பத்தி ராயுடு வெளியிட்டுள்ளார்.

IPL 2025:  predicted CSK playing eleven: உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. 2025 ஐபிஎல் தொடரை தங்களுக்கு பிடித்தமான அணிதான் கைப்பற்றும் என ரசிகர்கள் இப்போதே சமூக வலைத்தளத்தில் முட்டி மோதத் தொடங்கி விட்டனர். இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன.
 

ஐபிஎல் 2025

ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறந்த அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது சிஎஸ்கே என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ். மகேந்திர சிங் தோனி தலைமையில் 5 முறை ஐபில் கோப்பையை கையில் ஏந்தியுள்ள சிஎஸ்கே, இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அதற்கேற்ப ஐபிஎல் மெகா ஏலத்தில் சிறந்த வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கி வைத்துள்ளது.  ஐபிஎல்லில் இது தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளதால் அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்குவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், சிஎஸ்கேவின் உத்தேச பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கணித்துள்ளார்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உடன் சேர்ந்து, டெவன் கான்வே தொடக்க வீரராக வருவார் என்று அவர் கருதுகிறார்.  இருவரும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மிகவும் வெற்றிகரமாக விளையாடினர், மேலும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் அதே ஃபார்மை மீண்டும் பெற ஆர்வமாக இருப்பார்கள்.

ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வேட்டையாடப் போகும் 6 பவுலர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சூப்பர் ஃபார்மில் இருக்கும் ரச்சின் ரவீந்திரா அம்பத்தி ராயுடுவின் கூற்றுப்படி 3வது இடத்தில் களமிறங்குவார். தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி அல்லது விஜய் சங்கர் ஆகியோரில் ஒருவர் 4வது இடத்தில் களமிறங்குவார்கள் என அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். 5-வது இடத்தில் பவர்-ஹிட்டர் சிவம் துபே இருப்பார். அம்பதி ராயுடுவின் கூற்றுப்படி, ரவீந்திர ஜடேஜா அணியில் 6-வது இடத்தைப் பிடிப்பார். ஆல்-ரவுண்டர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அணிக்கு முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே பிளேயிங் லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனி 7வது இடத்தில் களமிறங்குவார் என அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். கடந்த ஆண்டு அணிக்காக விக்கெட் கீப்பர்-பேட்டர் தோனி முக்கிய பங்கு வகித்தார்,  இந்த ஆண்டும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த ஆர்வமாக இருப்பார். இதன்பிறகு பின்வரிசையில் சாம் கரன், ரவிச்சந்திரன் அஸ்வின், அன்ஷுல் கம்போஜ் மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்லதாக ராயுடு கூறியுள்ளார். 

அம்பத்தி ராயுடு கணித்த சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்) டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி அல்லது விஜய் சங்கர், ஷிவம் துபே, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், சாம் குர்ரன், மதீஷா பத்திரனா, அன்ஷுல் காம்போஜ்

ஐபிஎல் 2025: சிஎஸ்கேவின் பலம் என்ன? பலவீனம் என்ன? மேட்ச் வின்னர்கள் யார்? யார்?

Read Entire Article