ARTICLE AD BOX
பனிரெண்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை, அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராயர். இவரின் மகன் வெங்கடேசன் (வயது 42). இவர் தனது வீட்டில் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: கடலூர்: திதி கொடுக்க ஆற்றுக்கு வந்த மக்களை திணறவைத்த திடீர் வெள்ளம்; காவல்துறை துரித செயல்.!
உள்ளூரை சேர்ந்த மாணவ - மாணவியர்கள், இவரிடம் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர். இதனிடையே, கடந்த மார்ச் 14 அன்று, காலை நேரத்தில் டியூசனுக்கு பனிரெண்டாம் வகுப்பு மாணவி வந்துள்ளார்.
மாணவியிடம் பாலியல் சீண்டல்
அப்போது, சிறுமியிடம் ஆசிரியர் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். இதனால் டியூஷனில் இருந்து வெளியேறிய மாணவி, பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போக்ஸோவில் வெங்கடேசனை கைது செய்தனர்.
கைதான வெங்கடேசனுக்கு மனைவி, 18, 13 வயதுடைய மகன், இளவயது மகள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மருமகளிடம் பாலியல் அத்துமீறல்.. மாமியாருடன் சேர்ந்து தீயிட்டு கொளுத்திய கண்ணகி.!