ARTICLE AD BOX
நடைபெற இருக்கும் 2025 ஆம் ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசனுக்கு தனது மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரர் அம்பதி ராயுடு வெளியிட்டிருக்கிறார்.
பதினெட்டாவது ஐபிஎல் சீசன் இந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. தொடரின் இரண்டாவது நாள் மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரபல அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.
ரோகித் சர்மா உடன் துவக்க வீரர் யார்
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு விளையாடி இருக்கும் அம்பதி ராயுடு ஒட்டுமொத்தமாக நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் எவ்வாறாக அமையலாம் என்பது குறித்து தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து அம்பதி ராயுடு கூறும் பொழுது ” மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா உடன் துவக்க வீரராக மட்டுமில்லாமல் விக்கெட் கீப்பராகவும் ரிக்கல்ட்டன் இருப்பார். இதைத் தொடர்ந்து திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் வருவார்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நமன் திர் இருவரும் இருப்பார்கள்”
பதினோராவது வீரர் யார்?
“மேலும் மிட்சல் சான்ட்னர் ஏழாவது இடத்திலும், இதைத் தொடர்ந்து மூன்று இடங்களுக்கு தீபக் சகர், டிரண்ட் போல்ட் மற்றும் பும்ரா இருப்பார்கள். மேலும் 11வது வீரர் இடத்துக்கு சூழ்நிலையை பொறுத்து ஒரு இந்திய வீரர் வருவார். இம்பேக்ட் பிளேயர் இடத்தில் தேவைக்கு தகுந்தபடி ஒரு ஃபாரின் வீரர் இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : வீடியோ- ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த இலங்கை வீரர் பெரேரா.. 36 பந்துகளில் 108 ரன்கள் குவித்து அபாரம்.. விவரம்
அம்பதி ராயுடு மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் :
ரோகித் சர்மா, ரிக்கி ரிக்கல்ட்டன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்சல் சான்ட்னர், தீபக் சகர், டிரெண்ட் போல்ட், பும்ரா மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஒரு இந்திய இளம் வீரர்!
The post ஐபிஎல் 2025.. அம்பதி ராயுடு மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் XI.. வித்தியாசமான மாஸ் செலக்சன் appeared first on SwagsportsTamil.