மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு லீகல் நோட்டீஸ்.. என்ன நடந்தது?

10 hours ago
ARTICLE AD BOX

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்திருக்கும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் கார்பின் போஷ்க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சட்டரீதியான நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறது.

இந்த ஆண்டு இந்த மாதம் மார்ச் 22ஆம் தேதி 18 வது ஐபிஎல் சீசன் வந்து இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதே காலகட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிஎஸ்எல் தொடரும் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடிக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

சமீபத்தில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நடைபெற்றது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிஎஸ்எல் டி20 லீக் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்ததால் ஐபிஎல் நடைபெறும் காலத்தில் பிஎஸ்எல் தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

உலகில் முதல் நிலை டி20 லீக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிஎஸ்எல் தொடர் ஐபிஎல் நேரத்தில் நடைபெற்றால் அந்த தொடருக்கு ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் இரண்டு தொடர்களிலும் இடம்பெறும் வீரர்களும் ஏதாவது ஒரு தொடரில் மட்டுமே விளையாடக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

மும்பை இந்தியன்ஸ் மாற்று வீரருக்கு நோட்டீஸ்

இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கார்பின் போஷ் 2025 பிஎஸ்எல் தொடருக்கு பெசாவர் சல்மி அணியால் வாங்கப்பட்டார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த தென் ஆப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லிசாட் வில்லியம்ஸ் காயத்தின் காரணமாக வெளியேறினார். எனவே இவருடைய இடத்திற்கு சக தென் ஆப்பிரிக்க வீரர் 31 வயதான கார்பின் போஷ் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : ஒவ்வொரு பந்தும் மைன்ட் கேம்.. நான் சந்தித்த பவுலர்ல இவர்தான் கஷ்டமானவர் – விராட் கோலி வெளியிட்ட தகவல்

இதன் காரணமாக அவர் பாகிஸ்தான் பிஎஸ்எல் டி20 லீக்கில் இருந்து வெளியேறிவிட்டார். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கார்பின் போஷ் ஏஜென்டிடம், அவர் பிஎஸ்எல் தொடரில் விளையாடாததற்கான காரணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் தெரிவிக்க சட்டரீதியான நோட்டீசை அனுப்பி இருக்கிறது. ஒருவேளை அவருக்கு எதிர்காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிஎஸ்எல் தொடரில் தடை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

The post மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு லீகல் நோட்டீஸ்.. என்ன நடந்தது? appeared first on SwagsportsTamil.

Read Entire Article