ARTICLE AD BOX

இந்தியாவில் நடைபெற்ற 17வது ஐபிஎல் தொடர் 2024 இல் ஒவ்வொரு போட்டியின் போதும் வீரர்கள் விளையாடிய விதத்தை வைத்து ஸ்கோர் 300க்கும் மேலே சென்று விடும் என ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருந்தனர். BCCI மைதானங்களை கடந்த ஆண்டு அவ்வாறு “தார் ரோடு”போல தயார் செய்திருந்தது. இதனால் பவுலர்கள் பேட்ஸ்மேன்களை ரன்கள் எடுக்க விடாமல் தடுப்பது மிகவும் கடினமாக இருந்தது.
இதேபோன்று கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் IMPACT வீரர் முறை நடைமுறையில் இருந்தது. இது போட்டியின் சுவாரசியத்தை குறைத்து வந்தது. இந்த மேற்கண்ட இரண்டு விதிமுறைகளையும் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்க வேண்டும் என விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து BCCI சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
IMPACT வீரர் தேவை இல்லை என அனைத்து அணியின் கேப்டன்களும் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விரைவில் முடிவுகள் எடுக்கப்படும் என BCCI உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் ஐபிஎல் 18 வது தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரு பிரிவினருக்கும் ஏற்ற வகையில் PITCH தயார் செய்யப்படும் எனவும் BCCI உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் ஐபிஎல் 18 வது தொடரில் இந்த2 விதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த விளையாட்டின் மீதான சுவாரசியம் ரசிகர்களுக்கு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.