ARTICLE AD BOX
IPL Records : ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் இப்போது வரை ஆயிரக்கணக்கான பிளேர்கள் இந்த தொடரில் வந்து விளையாடி சென்றுள்ளனர். ஆனால் 9 பிளேயர்கள் மட்டும் 17 ஆண்டுகாலமாக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி, இப்போது 18வது ஆண்டிலும் விளையாட உள்ளனர். இந்தப் பட்டியலில் எல்லோருக்கும் தெரிந்த எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களைத் தவிர இன்னும் எஞ்சிய ஆறு பிளேயர்கள் உள்ளனர். இவர்களில் விராட் கோலி இன்று நடக்கும் ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டியில் விளையாடுவதால் 18வது சீசன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் முதல் பிளேயர் என்ற அந்தஸ்தைப் பெறப்போகிறார்.
1. மகேந்திர சிங் தோனி
இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் வரலாற்றில் ஜாம்பவான் என்ற முத்திரையை பெற்றிருக்கும் தோனி ஐபிஎல் போட்டிகள் தொடங்கியது முதல் விளையாடிக் கொண்டிருப்பவர். 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடிய ஒரே கேப்டன் என்ற பெருமை இவருக்கு மட்டுமே இருக்கிறது. இதுவரை 17 ஐபிஎல் சீசன்கள் விளையாடி இருக்கும் தோனி, இந்த முறை 18வது சீசனிலும் விளையாட இருக்கிறார். அதேபோல், அதிக முறை பிளேப் போட்டிகளிலும் விளையாடிய பிளேயர், கேப்டன் என்ற பல மகத்தான சாதனைகள் தோனி வசம் இருக்கும் நிலையில், அதில் இன்னொரு மகுடமாக 18 சீசன் ஐபிஎல் விளையாடிய பிளேயர் என்ற இந்த சாதனையும் சேரப்போகிறது.
2. விராட் கோலி
தோனிக்கு அடுத்து ஐபிஎல் வரலாற்றில் அடுத்த இடத்தில் உள்ளவர் விராட் கோலி. இவரும் 18 சீசன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிளேயர்கள் பட்டியலில் இடம்பெறப்போகிறார். ஆனால் இவருக்கும் தோனிக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் ஐபிஎல் கோப்பையை இன்னும் ஒரே ஒருமுறை கூட வென்றதில்லை என்பது தான். தோனி 10 ஐபிஎல் இறுதிப்போட்டி விளையாடி 5ல் வென்றிருந்தாலும் விராட் கோலிக்கு ஐபிஎல் சாம்பியன் பட்டம் என்ற கனவு மட்டும் இன்னும் நிறைவேறாமலேயே இருக்கிறது. இம்முறையாவது ஐபிஎல் கோப்பை கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாட உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் மாறாமல் ஒரே அணியில் விளையாடும் ஒரே பிளேயர் விராட் கோலி மட்டுமே.
3. ரோஹித் சர்மா
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடினார். அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றபோது பிளேயிங்கில் லெவனில் இருந்த ரோகித் அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்தார். அப்போது முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையில் அந்த அணி சிஎஸ்கே அணிக்கு நிகராக 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளும் இவை இரண்டு தான். இவரும் பலசாதனைகளை தன் பெயரில் வைத்திருந்தாலும் தோனி, விராட் கோலி பெயரில் சேரும் அதிக சீசன் ஐபிஎல் தொடரில் விளையாடியர் என்ற பெரும் ரோகித் சர்மா வசமும் வர இருக்கிறது.
4. மனிஷ் பாண்டே
ஐபிஎல் வரலாற்றில் பல அணிகளில் விளையாடிய பிளேயர் மணீஷ் பாண்டே. 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணிக்காக 94 ரன்கள் எடுத்து அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இப்போது அந்த அணிக்காக இந்த சீசனில் விளையாடும் இவர் 18 சீசன் ஐபிஎல் விளையாடிய பிளேயர்கள் பட்டியலில் இடம்பெற உள்ளார்.
5. அஜிங்க்யா ரஹானே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடங்கிய அஜிங்கியா ரஹானேவின் ஐபிஎல் பயணம் இந்த ஆண்டு கேகேஆர் அணியின் கேப்டனாக தொடர்கிறது. இடையில் சிஎஸ்கே அணியிலும் விளையாடினார்.
6. ஆர். அஸ்வின்
ஐபிஎல் தொடக்க காலத்தில் சிஎஸ்கே அணியில் தோனியின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். அதன்பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி மீண்டும் இப்போது சிஎஸ்கே அணிக்கே திரும்பியுள்ளார். இவரும் 18 சீசன் ஐபிஎல் விளையாடிய பிளேயர்கள் பட்டியலில் இடம்பெறப்போகிறார்.
7. ரவீந்திர ஜடேஜா
2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ரவீந்திர ஜடேஜா, அதன்பிறகு ஒப்பந்த சர்ச்சைகள் காரணமாக 2010 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் விளையாட முடியவில்லை. அவர் 2011 இல் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர், 2012ல் CSK இல் சேர்ந்த பிறகு அவரது வாழ்க்கை புதிய உயரங்களை எட்டியது. அவர் CSK-க்காக அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் ஆவார். ஐபிஎல்லில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்தவர் (37, 2021ல் ஆர்சிபிக்கு எதிராக). 2023 இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சிஎஸ்கேவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
8. இஷாந்த் சர்மா,
2008 ஆம் ஆண்டில், KKR அணிக்காக ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட பிளேயர் இஷாந்த் சர்மா. அதன்பிறகு ஐபிஎல் தொடரில் ஏழு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடிருக்கும் இவர் இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
9. ஸ்வப்னில் சிங்
இவரது முதல் அணி மும்பை இந்தியன்ஸ். அந்த அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. பஞ்சாப் அணிக்கு சென்ற பிறகு தான் ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை ஆர்சிபி அணிக்காக விளையாட உள்ளார்.
மேலும் படிங்க: ஏலம் போகாத வில்லியம்சன்... ஆனாலும் ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறார்... அது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ