ARTICLE AD BOX
ஒரு நாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இலங்கையின் மஹீஸ் தீக்ஷனா 680 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் ஒரு இடம் சரிந்து, 669 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு வந்துள்ளார். நமீபியாவின் பெர்னார்ட் ஸகோல்ட்ஸ் 3, இந்தியாவின் குல்தீப் யாதவ் 4, பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி 5, தென் ஆப்ரிக்காவின் கேஷவ் மஹராஜ் 6, நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் 7, மாட் ஹென்றி 8ம் இடங்களில் உள்ளனர். வெஸ்ட் இண்டீசின் குடகேஷ் மோட்டி 9, இந்தியாவின் முகம்மது சிராஜ் 10ம் இடத்தில் உள்ளனர். இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 13, முகம்மது ஷமி 15ம் இடங்களை பிடித்துள்ளனர்.
The post ஐசிசி பவுலிங் தரவரிசை இலங்கை வீரர் முதலிடம்: 4ம் இடத்தில் குல்தீப் யாதவ் appeared first on Dinakaran.