ARTICLE AD BOX
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் மூன்றாவது போட்டியில் கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி.
இந்த மேட்ச்சில் இரு அணிகளும் மாறுபட்ட ஃபார்ம்களுடன் களமிறங்குகின்றன. ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை தங்கள் சொந்த மண்ணில் தோற்கடித்தது, அதற்கு முன்பும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளிடம் தோற்றது. அதற்கு முன்பு, சொந்த மண்ணில் பாகிஸ்தானிடம் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. தென்னாப்பிரிக்கா அணி தனது கடைசி மூன்று இருதரப்பு ஒருநாள் தொடர்களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அயர்லாந்தை வீழ்த்தி, ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. அதே மைதானத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
இரு அணிகளும் தங்கள் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பிரச்சாரத்தை சிறப்பாகத் தொடங்கி, போட்டியில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ளும்.
மேட்ச் எப்போது?
இந்த மேட்ச் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும். 2 மணிக்கு டாஸ் போடப்படும்.
ஆப்கன் வீரர் ரஷீத் கான் 200 ஒருநாள் கிரிக்கெட் விக்கெட்டுகளை முடிக்க இன்னும் 2 விக்கெட்டுகள் தேவை.
டேவிட் மில்லர்: ஒருநாள் போட்டிகளில் 4500 ரன்களை எட்ட 10 ரன்கள் தேவை.
ரஸ்ஸி வான் டெர் டசன்: ஒருநாள் போட்டிகளில் 2500 ரன்களை எட்ட 36 ரன்கள் தேவை.
லுங்கி நிகிடி: ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்ட 3 விக்கெட்டுகள் தேவை.
ஆப்கானிஸ்தான் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, ரஷீத் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, அல் இஹ்மத், நூர் அஹ்மத், நவீத் சத்ரன், நங்கேயாலியா கரோட்
தென்னாப்பிரிக்கா அணி: ரியான் ரிக்கெல்டன்(விக்கெட் கீப்பர்), டோனி டி ஜோர்ஜி, டெம்பா பவுமா(கேப்டன்), மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்
பரிசுத் தொகை எவ்வளவு?
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது. முதல் போட்டி பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நடப்பு சாம்பியனாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா மேட்ச்கள் துபாயில் நடைபெறுகிறது.
கடந்த 2017இல் இங்கிலாந்தில் நடைபெற்ற முந்தைய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. பாதுகாப்பு காரணத்தை முன் வைத்து பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்து துபாயில் நடைபெறுகிறது. மற்ற அணிகளின் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன.
மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் மொத்தம் ரூ. 60 கோடி வரை பரிசுதொகை அளிக்கப்படுகிறது. இதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ. 19.5 கோடி, ரன்னர் அப் வரும் அணிக்கு ரூ. 9.7 கோடி அளிக்கப்படுகிறது. அரையிறுதி வரை தகுதி பெற்ற இதர அணிகளுக்கு ரூ. 4.9 கோடி வழங்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான பரிசுதொகை கடந்த 2017இல் நடைபெற்ற தொடரை காட்டிலும் 53 சதவீதம் வரை அதிகமாகும்.

டாபிக்ஸ்