ARTICLE AD BOX

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லர், ஐசிசியின் ஊழல் குறித்த நடத்தைச்சட்டங்களை மீறியதற்காக மூன்றரை ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்ட நிலையில், 2027 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் விளையாடும் கனவு கொண்டுள்ளார். தற்போது தடை முடிவடையும் நிலையில் ஜூலை மாதத்துக்குப் பிறகு, மீண்டும் தனது ஆட்ட திறனை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது நான் இன்னும் விளையாட விரும்புகிறேன். என் உடலிலும், மனதிலும் நம்பிக்கை இருக்கிறது. தற்போது கோசிங் வேலையிலிருந்து விலகி, 2027 வரை வீரராக இருங்கள் என ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகி கிவ்மோர் அவருக்கு உறுதுணையாக உள்ளார் என்றும் அவர் கூறுகிறார்.
தனது தடை காலத்திலும் டெய்லர் தொடர்ந்து St Johns மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். “அங்கு சிறந்த நெட்கள் மற்றும் உள்ளக ஹைபர்ஃபார்மன்ஸ் மையம் உள்ளது. அதிகாலையில் சென்றுவிட்டு, பிற்பகலில் மீண்டும் பயிற்சி செய்கிறேன்” என அவர் கூறியுள்ளார். கடந்த காலத்தில் மதுவும், போதைப்பொருள்களும் ஏற்பட்ட பிரச்சனைகளையடுத்து, மொசாம்பிக் எல்லை அருகே உள்ள ந்யாங்கா பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் 90 நாட்கள் சிகிச்சை பெற்றதாகவும், தனது வாழ்க்கையை sponsor ஒருவர் மாற்றியதாகவும் கூறியுள்ளார். மேலும் டெய்லர், 34 டெஸ்ட்களில் 2320 ரன்கள், 205 ஒருநாள் போட்டிகளில் 6684 ரன்கள், 45 T20 போட்டிகளில் 934 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.